தவெக கொடியில் இருப்பது வாகை மலரே இல்லையாம்.. தூங்குமூஞ்சி வாகையாம்.. நெட்டிசன்கள் காரசார விவாதம்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். கட்சிக்கொடியானது மேல் மற்றும் அடிப்பகுதியில் சிவப்பு நிறமும், மத்தியில் மஞ்சள் நிறத்திலும் உள்ளது. மத்தியில் உள்ள மஞ்சள் நிறத்தில் இருபக்கமும் யானைகள் திமிறி எழுவது போன்றும் இதற்கு நடுவில் வாகை மலரும் அதனை சுற்றி பச்சை, நீல நிறத்திலான ஸ்டார்கள் இம்பெற்றுள்ளன. இந்த நிலையில் விஜய் கொடியில் இருப்பது வாகை மலர் இல்லை என்றும் தூங்குமூஞ்சி வாகை என்று நெட்டிசன்கள் காரசாரமாக விவாதித்துக்கொண்டனர்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். தி கோட் படத்திற்கு பிறகு கைவசம் இருக்கும் ஒரு படத்தையும் நடித்து விட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட விஜய் திட்டமிட்டுள்ளார். 2026-சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டுள்ளதாக கூறியுள்ள விஜய், படிப்படியாக கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

விரைவில் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கும் விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். கருஞ்சிவப்பு- மஞ்சள் நிறத்துடன் கூடிய இந்த கொடியில் வாகை மலர் மற்றும் இரண்டு யானைகள் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. உள்ளே பச்சை நீல நிறங்கள் அடங்கிய 28 ஸ்டார்களும் உள்ளன. இந்தக் கொடியை தனது கட்சி அலுவலகத்தில் விஜய் ஏற்றி வைத்ததோடு தொண்டர்கள் அனைவரும் தங்களின் இல்லத்தில் ஏற்றுமாறு வேண்டுகோள் வைத்தார்.
விஜய் கட்சிக் கொடியை அறிமுகம் செய்த நிலையில், அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த கொடிகளை பகிர்ந்து வருகிறார்கள். தவெக கட்சியினரும் கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் உற்சாகம் அடைந்துள்ளனர். எனினும் விஜய் கட்சி கொடி அறிமுகம் ஆனதில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. கட்சி கொடியில் யானையை பயன்படுத்தக் கூடாது என்று பகுஜன் சமாஜ் கட்சி ஆனந்தன் கூறியுள்ளார்.
இதேபோல் கட்சிப் பாடல் லேசாக நான் அடிச்சால் தாங்க மாட்ட.. என்ற வேட்டைக்காரன் படத்தில் உள்ள பாடலின் சாயல் உள்ளதாகவும் நெட்டிசன்கள் சிலர் விமர்சித்தனர். இதேபோன்று விஜய் பயன்படுத்திய காருக்கு ரூ.4500 பைன் இருந்ததாகவும், அதை விஜய் கட்டாமல் இருப்பதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து விஜயின் கட்சி கொடியின் மையத்தில் உள்ள வாகை மலரும் இது கிடையாது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
அதாவது தமிழக வெற்றிக் கழக கொடியில் இடம் பெற்றது வாகை மலர் அல்ல, இது தூங்கு மூச்சி வகை மலர் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் பலர் அதற்கு மறுப்பு தெரிவித்து இது வாகை மலர் தான் என்றும் மாறி மாறி பதிவிட்டு வருகிறார்கள். வாகை மலர் பச்சை மற்றும் வெள்ளை நிற பூக்களை கொண்டிருக்கும் என்றும், விஜய் கொடியில் உள்ள மலரானது தென் ஆப்பிரிக்க நாட்டில் காணப்படும் ஒருவகை காட்டுப்பூ என்றும் கூறி வருகிறார்கள்.
சங்க காலத்தில் போரில் வெற்றி பெற்ற அரசனும், வீரர்களும் வெற்றியின் அடையாளமான வாகைப்பூவை சூடி அந்த வெற்றியை கொண்டாடுவார்கள் என்று தமிழ் இலக்கியங்களில் உள்ளது. போரில் வெற்றி பெற்றவர்கள் வாகைப்பூவை தொடுத்து வெற்றியின் சின்னமாக அதை கழுத்தில் அணிந்து கொள்வார்களாம். அந்த அடிப்படையில் தான் 'வெற்றி வாகை சூடினான்' என்ற பேச்சு வழக்கு தற்போதும் உள்ளது. வாகை மரம் என்பது தெற்காசியாவை பூர்வீகமாக கொண்டது. இந்த மரம் வெப்ப மண்டல பகுதிகளில் பரவலாக காணப்படக்கூடியது ஆகும்.
18 மீட்டர் முதல் 30 மீட்டர் வரை வாகை மரம் வளரக் கூடியது. இதில் பூக்கும் வாகை பூக்கள் இளமஞ்சள் அல்லது வெண்நிறத்துடன் காணப்படும். வாகை மரத்தின் இலை, பூ, பட்டை உள்பட அனைத்துமே மருத்துவ பயன்களை கொண்டவையாக உள்ளது. வாகை பூ குறித்த சொல் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் உள்ளதால், வாகைப்பூவை தமிழக வெற்றிக் கழகம் கொடியில் விஜய் இடம் பெற விரும்பியதாக சொல்லப்படுகிறது.
-
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா!












Click it and Unblock the Notifications