மகளின் காதலனை கூலிப்படையை ஏவி கொன்ற தவெக பிரமுகர் கைது! சென்னை அருகே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கேளம்பாக்கம் அருகே தையூரில் மகளின் காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த தவெக நிர்வாகி ஏழுமலை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேளம்பாக்கம் தையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. தவெக நிர்வாகியாக உள்ளார். ஏழுமலை தனது மகளை காதலித்த பிரவீன் (22) என்ற இளைஞரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Crime murder

டிப்ளமோ படித்துவிட்ட வேலை செய்து வந்த பிரவீன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த பிரவீன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 20 ஆம் தேதி உயிரிழந்தார்.

பிரவீன் உடல் நேற்று இரவு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது உடலை சாலையில் வைத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவெக நிர்வாகி ஏழுமலை மகளை பிரவீன் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இந்த கொலை நடந்துள்ளது.

இருவரும் ஒரே சமூகமாக இருந்தபோதிலும் அந்தஸ்து காரணமாக கொலை செய்யப்பட்டதாக பிரவீனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், தவெக பிரமுகர் ஏழுமலை, பெண்ணின் சகோதரர் கவுதம், கூலிப்படையைச் சேர்ந்த நிதிஷ், மணிகண்டன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரவீனை கொலை செய்த கூலிப்படை கும்பலின் தலைவனான சதீஷை போலீசார் தேடி வருகின்றனர். பிரவீன் கொலைக்கு நீதி கேட்டு, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+