TVK Meeting:புலியை ஆடு சீண்டுவது போல்..திமுகவுக்காக வேலை செய்யும் அண்ணாமலை..கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
சென்னை: திமுகவுக்காக வேலை செய்து வருபவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என்று தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். பெண்களை கேவலமாக பேசக் கூடியவரை பாஜக மாநில தலைவராக வைத்துள்ளதாக விமர்சித்துள்ள ஆதவ் அர்ஜுனா, திமுகவை வீட்டுக்கு அனுப்பும் அரசியலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தவெக தலைவர் விஜய்-ஐ தளபதி என்று சொல்லாமல், இனி வெற்றி தலைவர் என்று அழைப்போம். எம்ஜிஆர் பெயரிலான ராமச்சந்திரா ஹாலில் முதல் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

இது எவ்வளவு பெரிய ஒற்றுமையாக அமைந்துள்ளது. இது வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் இல்லை. உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல் இது. நமது எதிரி திமுக, பாஜகவும் தான் என்பதில் தெளிவாக சென்று கொண்டிருக்கிறோம். பெண்களை கேவலமாக பேசக் கூடியவரை பாஜக மாநில தலைவராக வைத்திருக்கிறது. திமுகவுக்காக வேலை செய்து வருகிறார் அண்ணாமலை. புலியை ஆடு சீண்டுவது போல் அண்ணாமலை எங்களை சீண்டுகிறார் என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications