வக்பு வாரிய திருத்த சட்டம்.. தவெக பொதுக்குழுவில் நிறைவேறிய தீர்மானம்..திமுக ரூட்டிற்கு வந்த விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தில் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்தார். அதற்கு பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தற்போது வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு தவெக சார்பாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் வந்துள்ளனர். அவர்களுக்கு 22 வகையான சைவ உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், தவெகவின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamizhaga Vetri Kazhagam TVK Vijay

17 தீர்மானங்கள்

அதேபோல் தவெக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், தவெகவில் தலைவர் விஜய்-க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும், மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு

அதேபோல் டாஸ்மாக் ஊழல் தொடர்பாகவும், சட்ட ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு, அரசாங்க ஊழியர்கள் போராட்டம், தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்றும், இரு மொழி கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேறியுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு

தொடர்ந்து இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பே நடத்த வேண்டும், அதுவே ஒரே தீர்வாக இருக்கும் என்று, சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் என்றும், கொள்கை தலைவர்கள் வழியில் பயணிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வக்பு வாரிய திருத்த சட்டம்

குறிப்பாக வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்திற்கு பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

திமுக ரூட்டில் விஜய்

தற்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டத் திருத்தமாக கூறப்பட்டு வரும் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக தவெக தலைவர் விஜய், சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+