விஜய்-க்கு நிகராக எனது புகைப்படமா.. ஆட்டோ கண்ணாடியில் கோடு போட்ட புஸ்ஸி ஆனந்த்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி நடத்தி வருகிறார். ஏற்கனவே மாநாடு, பொதுக்குழு செயற்குழு கூட்டம், 2வது ஆண்டு தொடக்க விழா, பூத் கமிட்டி மாநாடு என்று தவெக அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதனிடையே ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புக்காக மதுரை வந்த போது, தவெக நிர்வாகிகள் அவரை பார்க்க வந்து ஒரு பெரும் சலசலப்பையே உருவாக்கிவிட்டனர்.

நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருந்தாலும், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடர்ச்சியாக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறார். விஜய்-ன் பிறந்தநாள் அடுத்த மாதம் வரவிருக்கும் நிலையில், விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய்-ன் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைக்கும் பணிகளை புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

TVK General Secretary Bussy Anand cut his photo which is presented in a Auto with vijay

மக்களை சந்திப்பதோடு, தொழிலதிபர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், இஸ்லாமியர்கள் என்று அனைத்து தரப்பையும் விஜய் சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பலரையும் சந்திப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய தவெக நிர்வாகி ஒருவருக்கு புஸ்ஸி ஆனந்த் முன் பணம் கட்டி ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார். அதனை பனையூரில் உள்ள தவெக தலைமை கழகத்தில் வைத்து கொடுக்க புஸ்ஸி ஆனந்த் வந்த போது, ஆட்டோவின் கண்ணாடியில் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருந்தது.

இதனை பார்த்த புஸ்ஸி ஆனந்த், தலைவருக்கு நிகராக எனது புகைப்படமா என்று உடனடியாக நிர்வாகிகளிடம் கத்தி ஒன்றை எடுத்து வர கூறினார். இதன்பின் விஜய் உடன் இருந்த தனது புகைப்படத்தை மட்டும் தனியாக ஒரு கோடு போட்டு வெட்டி எடுத்தார். இதன்பின் தவெக நிர்வாகி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு அந்த ஆட்டோ அளிக்கப்பட்டது.

ஏற்கனவே தவெக தலைவர் விஜயை, யாரும் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாய்மொழி உத்தரவிட்டிருந்தார். சமீப காலமாக தவெக நிகழ்ச்சிகள் இல்லாத நேரங்களில், புஸ்ஸி ஆனந்த் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+