தவெக அரசு பட்ஜெட்டில் மாஸ்.. மாணவர்களுக்கு ரூ.3 கோடி ஜாக்பாட்! எந்த போட்டி தேர்வுக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்த இன்றைய பட்ஜெட்டில், தொடக்கமே அதிரடியை கிளப்பி விட்டுள்ளது.. மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டு கோடிக்கணக்கில் நிதி அள்ளி வீசப்பட்டுள்ளது. குறிப்பாக போட்டித்தேர்வுகளுக்கான சிறப்பு நிதி முதல் நவீன சைக்கிள் திட்டம் வரை ஒட்டுமொத்த தமிழக மாணவர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. போட்டித்தேர்வுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? போட்டித்தேர்வு என்றால் என்ன?

தமிழக சட்டமன்ற வரலாற்றில் புதிய அத்தியாயமாக, விஜய் தலைமையிலான ஆட்சியின் முதல் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே, நிதியமைச்சர் மரியவில்சன் 2026-27 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

Vijay Government Tamil Nadu Budget 2026 Students Competitive Exam 2026

விஜய் அரசு பட்ஜெட்

ஆரம்பமே அதிரடி என்பது போல, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைக்கு முதன்மை முன்னுரிமை அளித்து, மாணவர்களின் எதிர்காலத்தை வளர்க்கும் நோக்கில் ஏகப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன.. .

குறிப்பாக, அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் தூய்மையைப் பராமரிக்கும் பொருட்டு 139 கோடி ரூபாய் நிதியில் "சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ்" என்ற சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் கற்றலை ஊக்குவிக்கும் வகையில், கணினி வழிப்பயன்பாட்டிற்காக 2000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் "வெற்றி மடிக்கணினி திட்டம்" தொடங்கப்படவுள்ளது.

போட்டித் தேர்வு பயிற்சிகள்

அத்துடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்தில் புதிய நவீன மாற்றங்களை நிதியமைச்சர் மரியவில்சன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன்படி மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தலைக்கவசம் வைப்பதற்கான பிரத்யேக வசதி மற்றும் குடிநீர் பாட்டில் வைக்கும் வசதிகளுடன் கூடிய நவீன சைக்கிள்கள் இனி வழங்கப்படும்.

அந்தவரிசையில், இன்றைய பட்ஜெட்டில் மாணவர்களின் போட்டித்தேர்வுப் பயிற்சிகளுக்காக 3 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போட்டி தேர்வு என்றால் என்ன

போட்டி தேர்வு என்பது என்ன தெரியுமா? மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் தகுதி தேர்வுகளே போட்டித்தேர்வுகள் என அழைக்கப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கியியல் தேர்வுகள், ரயில்வே தேர்வுகள் மற்றும் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகள் இதில் அடங்கும். லட்சக்கணக்கான மாணவர்கள் பங்குபெறும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற ஸ்பெஷல் பயிற்சிகளும், கட்டமைப்பு வசதிகளும் ரொம்பவே அவசியமாகும்.

இன்றைய பட்ஜெட்டில் மாணவர்களின் போட்டித்தேர்வு பயிற்சிகளுக்காக 3 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் எளிய பொருளாதார பின்னணி கொண்ட மாணவர்கள் அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பிரைவேட் பயிற்சி மையங்களை அணுக முடியாத நிலைமையை போக்கி, அரசு சார்பிலேயே உயர்தர பயிற்சி அளிப்பதற்கு இந்த நிதி பயன்படும்.

மாணவர்களின் நலன்கள்

அதுமட்டுமல்ல, அரசு நூலகங்களில் போட்டித் தேர்வுகளுக்கான புதுப்பித்த புத்தகங்கள், டிஜிட்டல் கற்றல் பொருட்கள் மற்றும் மாதிரித் தேர்வுத் தாள்கள் பெற வழிவகை செய்யப்படும். உயர்தர நிபுணர்களைக் கொண்டு சிறப்பு வழிகாட்டுதல் முகாம்கள் நடத்தப்படுவதால், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் அரசுப் பணி கனவையும், நிதி நெருக்கடி எதுவுமேயில்லாமல் நனவாக்க முடியும்.

ஆக மொத்தம், பள்ளி உள்கட்டமைப்பு முதல் உயர் தொழில்நுட்பக் கற்றல் மற்றும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகள் வரை அனைத்து நிலைகளிலும் மாணவர்களை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த பட்ஜெட் அறிவிப்பு டிசைன் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+