ஒரு மதத்திற்காக செயல்படும் தவெக ஆட்சி.. அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சியமைத்து 5 மாதங்கள் கடந்துவிட்டன. முதலமைச்சர் விஜயும், அதிகாரிகளும் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு பாதிப்பு, மின்வெட்டு, தொழில் முதலீடு சொதப்பல் என பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. தவெக குறிப்பிட்ட மத அடையாளத்துடன் செயல்படுவதாக வலதுசாரி இந்து இயக்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் தவெக ஆட்சி கிறிஸ்வதுவ மதம் மட்டுமே இருக்க வேண்டுமென செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் புகார் கூறியுள்ளார்.

அம்பத்தூரில் நடந்த அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் பேசுகையில், ஒரே ஒரு மதம் இருக்க வேண்டுமென இந்த ஆட்சி செயல்படுகிறது. சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன், நான் ஒரு கிறிஸ்துவன். என் கிறிஸ்துவம் எனக்கு 5 மொழியை கற்று கொடுத்துள்ளது. அது பாசத்தின் மொழி என்கிறார். ஏன் இந்து மதம் சொல்லவில்லையா. இஸ்லாம் மதம் அது சொல்லி தரவில்லையா. ஒரு மதத்தை சார்ந்து இந்த அரசாங்கமே நடப்பதாக மக்களிடம் எண்ணம் உள்ளது.

tvk-government-functioning-for-one-religion-said-admk-pandiyarajan

3 மாதங்களில் ஆட்சி மாற்றம்

புரட்சி தலைவர், புரட்சி தமிழர் காலத்தில் இப்படி ஏற்பட்டதா. கடந்த 4 மாதங்களில் வில்லிவாக்கம் தொகுதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எத்தனை முறை வந்திருக்கிறார் என்று எண்ணி பாருங்கள். ஒருமுறை கூட வரவில்லை. மக்கள் இதை எண்ணி பார்க்க வேண்டும். முதலமைச்சர் விஜய் வந்தால் மக்கள் கூட்டம் அதிகம் வரும். கட்டுப்படுத்த முடியாது என்று ஏதாவது காரணத்தை சொல்லலாம். இவரால் ஏன் வர முடியவில்லை.

இவருக்கு என்ன அந்தளவுக் கூட்டமா வரப்போகிறது. என்ன சாக்கு சொல்ல போகிறார். இங்கு வந்து என்ன நடக்கிறது என்பதை பார்க்கட்டுமே. இது ஒரு சாம்பிள் மட்டும் தான். தமிழகத்தில் உள்ள 107 எம்எல்ஏக்களில் பலரும் இந்த நிலையில் தான் உள்ளனர். தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். மக்களுக்கு அம்மாவின் நலத்திட்டங்கள் மீண்டும் கிடைக்கும். கல்யாணசுந்தரம் சொல்வதை போல இன்னும் 3 மாதங்களில் இந்த ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது.

வில்லிவாக்கத்திற்கு இடைத்தேர்தல்

இன்னும் இரண்டே முக்கால் ஆண்டுகளில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல் நடக்க போகிறது. 2029 ஆண்டை கணக்கில் வைத்து கொள்ளுங்கள். இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு விடிவு கிடைக்கும். கொளத்தூர், வில்லிவாக்கம் இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் சீக்கிரம் வந்தாலும் வந்துவிடும் என்று நினைக்கிறேன். விழிப்புடன் இருங்கள். மிக மிக அதிமுக என்ன செய்திருக்கிறது என்பைதை தெரு தெருவாக கொண்டு சேர்ப்போம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+