சீக்ரெட் அசைன்மென்ட்.. தூது போகும் விஐபிகள் லாபி வேற.. தவெக அரசை முடக்கும் டிரான்ஸ்ஃபர் பஞ்சாயத்து?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தின் பவர்ஃபுல் காரிடார்களில் இப்போது ஒரு மிகப்பெரிய நிழல் யுத்தமே வெடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்றதும், பல ஆண்டுகளாக பதவியிலிருந்த அதிகாரிகளை தூக்கி அடித்து அரசாங்கம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அப்படி செய்யப்பட்ட டிரான்ஸ்பரில்தான் சில விஷயம் புகைந்து கொண்டிருக்கிறது..

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் தலைமையிலான தவெக அரியணையில் அமர்ந்த பிறகு, நிர்வாக ரீதியாக பல அதிரடி மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன. அதற்கு ஏற்றார்போலவே, ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அலுவலக உதவியாளர்கள் வரை, பல ஆண்டுகளாக ஒரே துறையிலும் ஒரே இடத்திலும் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

TVK Government Secret Assignment VIP Lobbying Behind Transfer Row in Secretariat

டிரான்ஸ்பர் - லாபிகள்

ஊரக வளர்ச்சி, நீர்வளம், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம், வருவாய் எனப் பல முக்கிய துறைகளில் இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை வேகமெடுத்தது. ஆனால், இந்த மாற்றங்கள் அதிகார வர்க்கத்தின் பழைய பழக்கங்களை மாற்றிவிட்டதா என்றால், அதுதான் இல்லை..

ஏனென்றால், டிரான்ஸ்பர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வாரங்கள் பல கடந்தும், பல முக்கிய அதிகாரிகள் இன்னும் புதிய இடங்களில் பொறுப்பேற்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்களாம்.. பழைய ஆட்சிகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்களின் பரிந்துரை கடிதங்களை பிடித்துக்கொண்டு, சென்ற இடத்திலிருந்தே மீண்டும் பழைய இடத்திற்குத் திரும்பிய அதே "பழைய ஆட்டத்தை" புதிய ஆட்சியிலும் தொடர இவர்கள் துணிந்துவிட்டதாக தகவல்கள் வட்டமடிக்கின்றன

கையெழுத்திடாமல் தாமதம்?

பொதுப்பணித் துறையில் கடந்த மாதம் 16ம் தேதி 23 கண்காணிப்புப் பொறியாளர்கள் நிர்வாகக் காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டனர். துறைச் செயலர் செல்வராஜ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தும், பெரும்பாலான அதிகாரிகள் புதிய இடத்தில் கையெழுத்திடாமல் நீண்ட நாள் மெடிக்கல் லீவில் சென்றுவிட்டார்களாம்.. நீர்வளத் துறையிலும் இதே கதைதான் அரங்கேறி கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இந்த டிரான்ஸ்பர் உத்தரவை ரத்து செய்ய மேல்மட்ட அளவில் காய்களும் நகர்த்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

அதேபோல இந்த ஆட்சியில் குறிப்பிட்ட சில சமூகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கருதிக்கொண்டு, அந்த சமுதாயத்தை சேர்ந்த செல்வாக்குமிக்க விஐபிகள் மூலமாக தலைமை செயலக கதவுகளை தட்டும் முயற்சிகளும் மறைமுகமாக நடப்பதாக சலசலப்புகளும் கிளம்பி உள்ளன.

துறைச்செயலர்களின் மெத்தனப் போக்கு

அரசுப் பணி விதிகளின்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய பணியிடத்தில் சேராத அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் உள்ளது. ஆனால், துறைச் செயலர்கள் சிலர் அத்தகைய நடவடிக்கைகளில் இறங்காமல் மெத்தனப் போக்கு காட்டுவது, திரைமறைவில் நடக்கும் சில "பேரங்கள்" குறித்த சந்தேகங்களையும் வலுப்படுத்தி வருகிறதாம்,.

எனினும் அதிகாரிகளின் இந்த அடாவடித்தனமும், நிர்வாகத்தின் அமைதியும் அரசுக்கு மிகப்பெரிய நிதி சிக்கலையும், இடர்பாட்டையும் உருவாக்கும் அபாயம் உள்ளது. அரசு விதிகளின்படி, ஒரு குறிப்பிட்ட பதவி நீண்ட காலமாக நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தால், அந்தப் பணியிடத்தை நிதித்துறை அப்படியே திரும்பப் பெற்றுவிடும் ..

அதே வரலாறு மீண்டுமா?

ஏற்கனவே பொதுப்பணி மற்றும் நீர்வள துறைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து, பல முக்கிய பணியிடங்கள் இல்லாமல் போன வரலாறு உண்டு. இப்போது மீண்டும் அதே நிலைமை தொடர்ந்தால், துறையின் கட்டமைப்புதான் பலவீனமடைமே தவிர, அதிகாரிகளுக்கு இழப்பில்லை.

அதனால் இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் உடனடியாக தலையிட்டு, துறை செயலர்களுக்கு தீர்க்கமான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+