காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்காக.. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நிதியை மடைமாற்றி ஒதுக்கிய தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பசியைப் போக்கி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், சமீபத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிற்றுண்டி, தற்போது 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

Kamarajar Breakfast Scheme

இந்நிலையில், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு.. ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) சிறப்பு வளர்ச்சி நிதியில் இருந்து பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகியுள்ளன.

நிதி ஒதுக்கீடு விவரங்கள்

பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான சத்துணவு வழங்குவதை உறுதி செய்ய மூன்று முக்கியப் பிரிவுகளாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவு

அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் அரசுத் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான மாநிலச் செலவினங்கள் மற்றும் குறிப்பிட்ட திட்டங்களுக்கான உதவித் தொகையாகப் பொதுப் பிரிவின் கீழ் மிக அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது:

ஓதுக்கீடு செய்யப்பட்ட நிதி: ரூபாய் 134 கோடியே 45 லட்சத்து 24 ஆயிரத்து 458

ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்கான சிறப்பு செயல் திட்டம்

ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பயிலும் பள்ளிப் பகுதிகளில், அவர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்தும் நோக்கில் ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்கான சிறப்பு பிரிவின் கீழ் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது:

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி:ரூபாய் 63 கோடியே 15 லட்சத்து 19 ஆயிரத்து 64

சுமார் 6.31 கோடி ரூபாய் ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்கான சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ் இத்திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

பழங்குடியினர் பகுதித் துணைத் திட்டம்

பழங்குடியினர் வாழும் மலைக்கிராமங்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்துவதற்காகத் தனி நிதி பழங்குடியினர் பகுதித் துணைத் திட்டத்தில் இருந்து அளிக்கப்பட்டுள்ளது:

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி: ரூபாய் 6 கோடியே 11 லட்சத்து 14 ஆயிரத்து 748

சுமார் 6.11 கோடி ரூபாய் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ் இத்திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் முக்கியத்துவம்

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மூலம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து, இடைநிற்றலை இது குறைத்துள்ளது. தற்போது பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் இயங்கும் இத்திட்டம், மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால் எஸ்சி, எஸ்டி நிதியில் கைவைக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+