"அறங்காவலர்களை ஓரம் கட்டிவிட்டு அராஜகம்!" - மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடி.. பிடிஆர் சுளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பொதுமக்கள் அலைக்கழிப்பு விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்ததும், புனித நீருக்குப் பதில் குடிநீர் தெளிக்கப்பட்டதும் என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தற்போதைய தவெக அரசு சட்ட திட்டங்களை மீறி, அனுபவம் வாய்ந்த அறங்காவலர்களை முழுமையாகப் புறக்கணித்ததே இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

PTR Palanivel Thiagarajan

சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்காத அரசு: பிடிஆர் சாடல்

தனது பதிவில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள பிடிஆர், "இன்று நடைபெற்ற ஒட்டுமொத்த கும்பாபிஷேக நிகழ்வும் தற்போதைய தவெக அரசால், தங்களது அதிகாரிகளை மட்டுமே கொண்டு, கோயில் அறங்காவலர் குழுவின் எந்த ஆலோசனையையும் கருத்துகளையும் கேட்காமல் தன்னிச்சையாக நடத்தப்பட்டுள்ளது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், "இது தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டங்களுக்கும், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த தீர்ப்புகளுக்கும் நேரெதிரான அப்பட்டமான விதிமீறல்" என்றும் அவர் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

அனுபவமில்லாத அதிகாரிகள்; அல்லல்பட்ட பொதுமக்கள்

கும்பாபிஷேகத்தைக் காண முடியாமல் சாமானிய மக்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு அவதிப்பட்ட பல வீடியோக்களையும் பதிவுகளையும் இன்று காலை முதல் மக்கள் தனக்கு அனுப்பி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு தற்போதைய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசிலும் கூட்ட நெரிசல் போன்ற சில அசௌகரியங்கள் ஏற்படுவது வழக்கம் என்றாலும், இன்றைய ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்விக்கு தற்போதைய அரசே முழுப் பொறுப்பு. ஏனெனில், இதற்கு முன் இதுபோன்ற பிரம்மாண்ட பெருவிழாக்களை வெற்றிகரமாக நடத்திய நீண்ட அனுபவம் கொண்ட அறங்காவலர்களை திட்டமிடல் பணிகளிலிருந்தே திட்டமிட்டு முழுமையாக ஒதுக்கி வைத்தனர். அதற்குப் பதிலாக, இதுபோன்ற திருவிழாக்களை நடத்தி எந்தவித முன் அனுபவமும் இல்லாத அதிகாரிகளைக் கொண்டு ஒட்டுமொத்த நிகழ்வையும் நடத்தியதே பொதுமக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம் என்று பிடிஆர் குற்றம் சாட்டியுள்ளார்.

95% திருப்பணிகளைச் செய்தது திமுக அரசுதான்!

கோயிலின் திருப்பணிகள் குறித்துப் பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த மாபெரும் கும்பாபிஷேகத்திற்காக மேற்கொள்ளப்பட்ட 95 சதவீதத்திற்கும் அதிகமான அரும்பணிகள் - குறிப்பாக தீ விபத்தில் சேதமடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீர வசந்தராயர் மண்டபத்தை மீட்டெடுத்தது உள்ளிட்ட பிரம்மாண்ட திருப்பணிகள் அனைத்தும் - 2021 முதல் 2026 வரையிலான முந்தைய திராவிட முன்னேற்றக் கழக (திமுக) ஆட்சிக் காலத்தில்தான் முழுமையாகச் செய்து முடிக்கப்பட்டன என்பதை நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன்" என்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

வருடக்கணக்கில் மெனக்கெட்டு, பல கோடி ரூபாய் செலவில் கோயில் மண்டபங்களையும் கோபுரங்களையும் சீரமைத்து கும்பாபிஷேகத்திற்கான அனைத்துக் களப்பணிகளையும் முந்தைய அரசு முடித்து வைத்திருந்த நிலையில், இறுதிக்கட்ட திருவிழா ஏற்பாடுகளைக் கூடச் சரியாக ஒருங்கிணைக்கத் தெரியாமல், சட்டம் மற்றும் நீதிமன்ற விதிகளை மீறி அறங்காவலர்களைப் புறக்கணித்து பக்தர்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது தவெக அரசு என்ற பிடிஆரின் அறிக்கை அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+