தவெக வெற்றி வாய்ப்பு சூப்பர்.. உளறி கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்.. பாவம் அதிமுக
சென்னை சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுவதை அதிமுக தலைமை கௌரவ பிரச்சனையாக பார்க்கிறது. களத்தில் முதல் ஆளாக இறங்கி வேலை பார்க்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தலில் தவெக வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முனுசாமி கூறுகையில், "தமிழகத்தில் நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுமே கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளாகும்.

இடைத்தேர்தல்
அதனால் இப்போது நடைபெறவுள்ள இடைதேர்தலில், ஏற்கனவே எங்கள் கூட்டணியில் உள்ள பாஜகவிடம் ஆதரவு அளிக்க வேண்டுமென பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். அதற்காக எங்களை அனுப்பியுள்ளார். பொதுச்செயலாளரின் ஆதரவு கடிதம், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் இன்முகத்துடன் இந்த கடிதத்தை பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர்கள் உடனடியாக ஆதரவா இல்லையா என்பதை சொல்ல முடியாது. இவர் மாநில தலைவர். உரியவர்களிடம் கேட்டு விரைவில் ஆதரவு பற்றி கூறுவர். ஏற்கனவே எங்களுடன் இருந்த, இருக்கின்ற கூட்டணி கட்சி தலைவர்களை ஒன்றன் பின் ஒன்றாக சந்தித்து ஆதரவு கேட்போம். இந்த தொகுதிகளில் மக்கள் எங்கள் வேட்பாளர்களை நம்பிக்கையோடு வெற்றி பெற வைத்தனர். அவர்கள் மக்களை ஏமாற்றி சென்றுவிட்டனர்.
புயலை கிளப்பிய திண்டுக்கல் சீனிவாசன்
மீண்டும் அந்த மக்களின் நம்பிக்கையோடு அந்த தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள். அவர்கள் உறுதியாக வெற்றி பெறுவோம் "என்றார். அப்போது செய்தியாளர்கள், "தவெகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது" என்று கேட்டார். அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், "நல்லாருக்கு.. நல்லாருக்கு" என்று கூறினார். சார் "தவெக வெற்றி வாய்ப்பை கேட்டேன்" என செய்தியாளர் கூறினார். "தவெகவை பற்றியா கேட்ட. என்னப்பா நீ" என்று கூறி சென்றார். அவரின் பதிலை கேட்டு கட்சிக்காரர்களும், செய்தியாளர்களும் சிரித்தனர்.


Click it and Unblock the Notifications
