நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!
சென்னை: அடிமட்ட தொண்டர்களுக்கும், கட்சிக்காக உழைப்பவர்களுக்கும்தான் சீட் என்று தவெக தொடர்ந்த கூறி வந்த நிலையில், தூத்துக்குடியில் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அஜிதா ஆக்னலுக்கு சீட் கொடுக்காமல், விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கு சீட் கொடுக்கப்பட்டிருப்பது, கட்சியின் நிலைப்பாடு மீது மிகப்பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது.
"பாருங்க.. நாங்க திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வந்திருக்கிறோம். இங்கு போஸ்டர் ஒட்டிய அடிமட்ட தொண்டர்களுக்குதான் எம்எல்ஏ சீட்" என்று தவெக தலைவர்கள் பேசிருந்தனர். இதை பார்த்த சாமானிய மக்கள் கட்சிய முழுமையாக நம்பினர்.

வேட்பாளர் தேர்வு
ஆனால், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தவெகவின் வேட்பாளர் தேர்வு, சாமானிய மக்களை கட்சியிலிருந்து வெகு தூரத்திற்கு தள்ளி வைத்திருக்கிறது. முதல் பிரச்சனை புதுச்சேரியில்தான் வெடித்தது. நேற்றுவரை பாஜகவில் இருந்து, இன்று தவெகவில் இணைந்தவருக்கு சீட் ஒதுக்கப்பட்டதால், கட்சி பணிகளை இழுத்துப்போட்டு செய்து வந்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைந்தனர். கோடிக்கணக்கில் செலவு செய்ய தயாராக உள்ளவர்களுக்குதான் சீட் என்று கட்சி தலைமை சொல்லிவிட்டதாகவும், எனவே கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
திராவிட கட்சிகளுக்கு மாற்றா விஜய்?
இதனையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது சலசலப்புகள் உச்சமடைந்தன. பல தொகுதிகளில் காசு உள்ளவர்களுக்கே சீட் என்கிற நிலைமை உருவானது. மட்டுமல்லாது மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
செங்கோட்டையன் - முன்னாள் அதிமுக அமைச்சர் - கோபிசெட்டிப்பாளையத்தில் களமிறங்குகிறார்
ஆதவ் அர்ஜுனா - முன்னாள் விசிக நிர்வாகி - வில்லிவாக்கத்தில் களமிறங்குகிறார்
நிர்மல் குமார் - முன்னாள் அதிமுக நிர்வாகி - திருப்பரங்குன்றத்தில் களமிறங்குகிறார்
புரசை வி.எஸ்.பாபு - முன்னாள் அதிமுக நிர்வாகி - கொளத்தூரில் களமிறங்குகிறார்
டி.செல்வம் - முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி - சேப்பாக்கத்தில் களமிறங்குகிறார்
ஆர்.எஸ்.முருகன் - முன்னாள் திமுக நிர்வாகி- நெல்லையில் களமிறங்குகிறார்
ரஞ்சித் குமார் - முன்னாள் எம்ஜிஆர் அதிமுக நிர்வாகி- காஞ்சிபுரத்தில் களமிறங்குகிறார்
என்.திருப்பதி - முன்னாள் அதிமுக நிர்வாகி- திருப்பத்தூரில் களமிறங்குகிறார்
ரெட்டியார்பட்டி நாராயணன் - முன்னாள் அதிமுக நிர்வாகி - நாங்குநேரியில் களமிறங்குகிறார்
இவரா மாற்றத்தை ஏற்படுத்துவார்?
இப்படித்தான் தவெகவில் சீட் வழங்கப்பட்டிருக்கிறது. திமுகவிலிருந்து அதிமுகவுக்கும், அதிமுகவிலிருந்து திமுகவிலும் இணைந்த களம் காண்பவர்கள் காலம் காலமாக இருந்து வருகிறார்கள். பிரச்சனை அது கிடையாது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாற்று நாங்கள்தான் என்று சொல்லிக்கொள்ளும் விஜய், இந்த கட்சியின் முன்னாள் நிர்வாகிகளை அழைத்து வந்து தனது கட்சி வேட்பாளராக களமிறக்கியிருப்பதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அஜிதாவின் அதிருப்தி
மறுபுறம் கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களுக்கும் சீட் கொடுக்கவில்லை என்கிற விமர்சனங்கள் வலுத்துள்ளன. தூத்துக்குடியில் கட்சிக்காக உண்மையாக உழைத்த அஜிதாவுக்கு சீட் வழங்காமல், விஜய் தனது நண்பர் ஸ்ரீநாத்துக்கு சீட் வழங்கியதால் அஜிதா, தவெகிவிலிருந்து விலகியிருக்கிறார். அவர் தனது வீட்டில் ஒட்டப்பட்டிருந்த விஜய்யின் ஸ்டிக்கர், போஸ்டர், படங்களை அஜிதா கிழித்தெறியும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. இது தூத்துக்குடியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
ரூ. 20 லட்சம் கடன் தருவோம்.. இளைஞர்களை ஈர்க்க மேஜர் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த தவெக தலைவர் விஜய்! -
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர் -
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் விஜய் டிக் அடித்த அந்த பழைய முகம்! திமுக வளர்த்தெடுத்த புள்ளி! யார்? -
ஜனநாயகன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்.. ரஜினிக்கு பயந்து இந்த முடிவா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications