திமுக 104.. அதிமுக வெறும் 56.. இரண்டாவது இடத்தை பிடிக்கும் தவெக.. எத்தனை தொகுதிகள்? பரபர TVK சர்வே?
சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 30% வாக்குப்பங்கைப் பெறுவோம் என்றும், மக்கள் விஜய்யை முதல்வராக விரும்புகிறார்கள் எனவும் உட்கட்சி ஆய்வுகள் மூலம் மதிப்பிட்டுள்ளது. அதாவது அந்த கட்சி சார்பாக நடத்தப்பட்ட உட்கட்சி சர்வேயில் இந்த முடிவுகள் உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
உட்கட்சி ஆய்வின்படி, தி.மு.க. 104 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்க, த.வெ.க. 74 இடங்களையும், அ.தி.மு.க. 56 இடங்களையும் பெறும் எனக் கணித்துள்ளது.

இது குறித்துப் த.வெ.க. வட்டாரங்கள் நம்மிடம் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகம் அதிக மக்களாதரவு பெற்ற கட்சி என்பதை மக்கள் அறிவர். நாங்கள் 30% மேல் வாக்குகள் பெறுவதாகப் பல ஆய்வுகள் காட்டுகின்றன. தி.மு.க.வின் வாக்கு சதவீதம் 21%ஐ தாண்டாது என்று நாங்கள் நம்புகிறோம்; ஜெயலலிதா இல்லாத கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 19.5% பெற்றது.. இனி அதற்கும் வாய்ப்பு இல்லை" என்றார்.
மேலும் அவர், "தமிழகத்தில் எங்கள் கட்சிக்கு மட்டுமே அதிகபட்ச மக்கள் ஆதரவு உள்ளது. எங்கள் தலைவர் யாரையும் முதல்வராக்க கட்சியைத் தொடங்கவில்லை. மக்கள் தங்கள் தலைவரை முதலமைச்சராக்கவே எங்களை ஆதரிக்கிறார்கள்" என்றும் கூறுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் நடத்திய இந்த உட்கட்சி சர்வே
தமிழக வெற்றிக் கழகம் நடத்திய இந்த உட்கட்சி சர்வே தொடர்பாக 'இந்தியா டுடே' ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. அதில், 41,453 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், தி.மு.க. 32.9% ஆதரவுடன் முன்னணி வகிக்க, தொடர்ந்து த.வெ.க. 31.7% மற்றும் அ.தி.மு.க. 27.3% ஆதரவை பெற்றன. 8.1% பேர் மற்ற கட்சிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
இந்த மதிப்பீட்டில், சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவள்ளூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் த.வெ.க.வுக்கு வலுவான கோட்டைகள் அடையாளம் காணப்பட்டன.
உட்கட்சி ஆய்வின் இருக்கை கணிப்பின்படி, தி.மு.க. 104 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்க, த.வெ.க. 74 இடங்களையும், அ.தி.மு.க. 56 இடங்களையும் பெறும் எனக் கணித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் பின்னடைவு
அதே சமயம் ஆளும் திமுக ஒரு தனியார் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தியதாகக் கூறப்படும் சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தவெக குறித்த முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரபூர்வமற்ற கருத்து கணிப்பு என்று கூறப்படுகிறது.
இந்த சர்வே தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வாக்காளர் ஆதரவில் நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதைக் காட்டியுள்ளது. அதாவது அந்த கட்சிக்கு நகர்புறத்தில் உள்ளது போல கிராமப்புறத்தில் பெரிய அளவில் ஆதரவு இல்லை என்று இந்த சர்வேயில் கூறப்படுகிறது.
தவெக சர்வே
சர்வே முடிவுகளின்படி, தமிழக வெற்றி கழகத்திற்கு நகரங்கள் மற்றும் மாநகரங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் ஆதரவு உள்ளது. மாநகராட்சி மற்றும் நகர்ப்புற மையங்களில் கட்சிக்கு சுமார் 10 முதல் 15 சதவீதம் வாக்காளர் ஆதரவு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள்.. நகர்ப்புற இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலைமை வேறாக உள்ளதாக இந்த சர்வே கூறுகிறது. அங்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாக ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்கள் இன்றும் பெரிய நகரங்களுக்கு வெளியே வசிப்பதால், கிராமப்புறங்களில் தமிழக வெற்றி கழகத்தின் குறைந்த ஆதரவு.. அந்த கட்சிக்கு ஒரு பெரும் சவாலாகக் கருதப்படுகிறது.
-
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்!












Click it and Unblock the Notifications