விஜய் இதை மட்டும் செஞ்சா! அரசியல் உலகில் பெரிய சாதனைதான்! சர்வேவை பாருங்க.. காத்திருக்கும் திருப்பம்
சென்னை: தமிழ்நாட்டில் 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் விஜய் கேம் சேஞ்சராக மாறுவார் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி சர்வே தெரிவிக்கிறது. இந்த சர்வே உண்மையாகும் பட்சத்தில் அது கட்சிக்கு பெரிய சாதகமாக மாறும்.
2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 30% வாக்குப்பங்கைப் பெறுவோம் என்றும், மக்கள் விஜய்யை முதல்வராக விரும்புகிறார்கள் எனவும் உட்கட்சி ஆய்வுகள் மூலம் மதிப்பிட்டுள்ளது. அதாவது அந்த கட்சி சார்பாக நடத்தப்பட்ட உட்கட்சி சர்வேயில் இந்த முடிவுகள் உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
உட்கட்சி ஆய்வின்படி, தி.மு.க. 104 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்க, த.வெ.க. 74 இடங்களையும், அ.தி.மு.க. 56 இடங்களையும் பெறும் எனக் கணித்துள்ளது.
இது குறித்துப் த.வெ.க. வட்டாரங்கள் நம்மிடம் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகம் அதிக மக்களாதரவு பெற்ற கட்சி என்பதை மக்கள் அறிவர். நாங்கள் 30% மேல் வாக்குகள் பெறுவதாகப் பல ஆய்வுகள் காட்டுகின்றன. தி.மு.க.வின் வாக்கு சதவீதம் 21%ஐ தாண்டாது என்று நாங்கள் நம்புகிறோம்; ஜெயலலிதா இல்லாத கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 19.5% பெற்றது.. இனி அதற்கும் வாய்ப்பு இல்லை" என்றார்.
மேலும் அவர், "தமிழகத்தில் எங்கள் கட்சிக்கு மட்டுமே அதிகபட்ச மக்கள் ஆதரவு உள்ளது. எங்கள் தலைவர் யாரையும் முதல்வராக்கக் கட்சியைத் தொடங்கவில்லை. மக்கள் தங்கள் தலைவரை முதலமைச்சராக்கவே எங்களை ஆதரிக்கிறார்கள்" என்றும் கூறுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் நடத்திய இந்த உட்கட்சி சர்வே
தமிழக வெற்றிக் கழகம் நடத்திய இந்த உட்கட்சி சர்வே தொடர்பாக 'இந்தியா டுடே' ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. அதில், 41,453 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், தி.மு.க. 32.9% ஆதரவுடன் முன்னணி வகிக்க, தொடர்ந்து த.வெ.க. 31.7% மற்றும் அ.தி.மு.க. 27.3% ஆதரவை பெற்றன. 8.1% பேர் மற்ற கட்சிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
இந்த மதிப்பீட்டில், சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவள்ளூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் த.வெ.க.வுக்கு வலுவான கோட்டைகள் அடையாளம் காணப்பட்டன.
உட்கட்சி ஆய்வின் இருக்கை கணிப்பின்படி, தி.மு.க. 104 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்க, த.வெ.க. 74 இடங்களையும், அ.தி.மு.க. 56 இடங்களையும் பெறும் எனக் கணித்துள்ளது.
விஜய்க்கு சாதகமாக மாறும் தேர்தல்
இந்த சர்வே உண்மையாகும் பட்சத்தில் அது கட்சிக்கு பெரிய சாதகமாக மாறும். அரசியல் ரீதியாக அது விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும்.
1. விஜய் முதல்முறை அரசியல்வாதி. அவரின் கட்சியில் செங்கோட்டையன் தவிர வேறு சீனியர்கள் இல்லை.
2. இப்போது வரை அவர் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. ஒருவேளை தனியாக.. அவர் சர்வேபடியே 70 க்கும் அதிகமான இடங்களை வென்றால் அது பெரிய சாதனையாக அமையும்.
3. திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளை அவர் எதிர்கொண்டு உள்ளார். இப்படிப்பட்ட கட்சிகளை எதிர்கொண்டு அவர் சர்வேபடியே 70 க்கும் அதிகமான இடங்களை வென்றால் அது பெரிய சாதனையாக அமையும்.
4. எம்ஜிஆருக்கு இருந்தது போல கட்டமைப்பு பலம் விஜய்க்கு இல்லை. அவருக்கு வலுவான கிரவுண்டு பலம் இல்லை. அதை மீறி விஜய் 70 க்கும் அதிகமான இடங்களை வென்றால் அது பெரிய சாதனையாக அமையும்.
5. முதல் தேர்தலிலேயே 70 க்கும் அதிகமான இடங்களை வென்றால் அது அரசியல் உலகில் பெரிய சாதனையாக அமையும்.












Click it and Unblock the Notifications