தரமான ட்விஸ்ட்.. மதுரை, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், etc.. மொத்தமாக அள்ளும் விஜய்? சர்வே
சென்னை: தமிழ்நாட்டில் நடக்கும் 2026 சட்டசபை தேர்தலில் தவெக வலுவாக இருக்கும் மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆளும் திமுக ஒரு தனியார் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தியதாகக் கூறப்படும் சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தவெக குறித்த முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரபூர்வமற்ற கருத்து கணிப்பு என்று கூறப்படுகிறது.

இந்த சர்வே தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வாக்காளர் ஆதரவில் நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதைக் காட்டியுள்ளது. அதாவது அந்த கட்சிக்கு நகர்புறத்தில் உள்ளது போல கிராமப்புறத்தில் பெரிய அளவில் ஆதரவு இல்லை என்று இந்த சர்வேயில் கூறப்படுகிறது.
தவெக சர்வே
சர்வே முடிவுகளின்படி, தமிழக வெற்றி கழகத்திற்கு நகரங்கள் மற்றும் மாநகரங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் ஆதரவு உள்ளது. மாநகராட்சி மற்றும் நகர்ப்புற மையங்களில் கட்சிக்கு சுமார் 10 முதல் 15 சதவீதம் வாக்காளர் ஆதரவு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள்.. நகர்ப்புற இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலைமை வேறாக உள்ளதாக இந்த சர்வே கூறுகிறது. அங்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாக ஆய்வு கூறுகிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்கள் இன்றும் பெரிய நகரங்களுக்கு வெளியே வசிப்பதால், கிராமப்புறங்களில் தமிழக வெற்றி கழகத்தின் குறைந்த ஆதரவு.. அந்த கட்சிக்கு ஒரு பெரும் சவாலாகக் கருதப்படுகிறது.
அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, சட்டமன்றத் தேர்தல்களில் கிராமப்புற, புறநகர் வாக்காளர்கள் முடிவை தீர்மானிக்க கூடிய சக்தியினராக இருக்கின்றனர். இதனால் தமிழக வெற்றி கழகம் இதை எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தவெக உட்கட்சி சர்வே
மேலே உள்ளது தி.மு.க.வின் think tank எனப்படு சர்வே குழு நடத்திய சர்வே. இன்னொரு பக்கம் தவெகவின் உட்கட்சி சர்வே ஒன்றும் வெளியே வந்துள்ளதாம். அதில், தமிழ்நாட்டில் நடக்கும் 2026 சட்டசபை தேர்தலில் தவெக வலுவாக இருக்கும் மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மதிப்பீட்டில், சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவள்ளூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் த.வெ.க.வுக்கு வலுவான கோட்டைகள் அடையாளம் காணப்பட்டன.
தவெக வாக்கு வங்கி
தமிழக வெற்றிக் கழகம் நடத்திய இந்த உட்கட்சி சர்வே தொடர்பாக 'இந்தியா டுடே' ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. அதில், 41,453 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், தி.மு.க. 32.9% ஆதரவுடன் முன்னணி வகிக்க, தொடர்ந்து த.வெ.க. 31.7% மற்றும் அ.தி.மு.க. 27.3% ஆதரவை பெற்றன. 8.1% பேர் மற்ற கட்சிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
உட்கட்சி ஆய்வின்படி, தி.மு.க. 104 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்க, த.வெ.க. 74 இடங்களையும், அ.தி.மு.க. 56 இடங்களையும் பெறும் எனக் கணித்துள்ளது. அதாவது தவெக அதிமுகவிற்கு சாதகமான இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று சர்வே கூறுகிறது.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!











Click it and Unblock the Notifications