பாஜக எனும் ஆக்டோபஸுக்கு தவெக ஒரு நிழல் அமைப்பு? கொத்து பரோட்டோ பேச்சால் கிளம்பிய அரசியல் புயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சருக்கு தெரியாமல் அதிகாரிகள் செயல்படுகிறார்களா அல்லது போலீசார் அவரது கட்டுப்பாட்டில் இல்லையா? அடுத்தவர் மீது வழக்கு போடுவது என்ன பெரிய சரித்திர சாதனைப் படைப்பா? ஜனநாயகன் படத்தில் முதலமைச்சர் நடித்ததற்காக அவருக்கு ஆஸ்கார் விருதோ அல்லது நோபல் பரிசோ வழங்கப் பரிந்துரைக்கலாம். இப்போது நோபல் பரிசு கமிட்டியின் தலைவராக வைக்கோதான் இருக்கிறார் என நினைக்கிறேன்.. அவரே அந்தப் பரிசை வாங்கித் தரலாம்" என்று அரசியல் திறனாய்வாளர் முனைவர் பொன்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

south beat என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பொன்ராஜ், "மோடி எதிர்ப்பு என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்றால், மோடியினுடைய மதவாதம், சாதியவாதம், மொழித் திணிப்பு, கல்வி மற்றும் மருத்துவ உரிமைகளைப் பறிப்பது, மாநில சுயாட்சியைப் பறிப்பது போன்ற செயல்களில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

TVK BJP Ponraj Tamil Nadu Politics

ஆக்டோபஸின் பல கரங்கள்

இந்திய அளவில் பார்த்தால் பாஜக தான் நமக்கு எதிரி என்று தெரியும். ஆனால், வலதுசாரி இயக்கம் என்பது ஒட்டுமொத்த உலகத்தையும் சூழ்ந்திருக்கும் ஒரு "ஆக்டோபஸ்" போன்றது. அந்த ஆக்டோபஸின் பல கரங்களில் ஒன்றுதான் பாஜக. அதனால் வெறும் "பாஜக எதிர்ப்பு" என்பது மட்டுமே இங்கு கிடையாது, இதன் பின்னணியை ஒட்டுமொத்தமாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்

இதில் தவெக இருக்கிறதா என்று கேட்டால், அது பாஜகவின் ஒரு "பிராக்ஸி'" (Proxy - நிழல் அமைப்பு). தமிழகத்தில் பாஜக தன்னைத் தியாகம் செய்து தவெகவை உருவாக்கியிருக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ளாவிட்டால் அரசியலை புரிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். அதாவது, தவெகவை எதிர்ப்பதும் பாஜகவை எதிர்ப்பதும் ஒன்றுதான்.

தவெக - பாஜக எதிர்ப்பு

சமூக நீதி, சிறுபான்மையினர் நலன், எம்பிசி மற்றும் முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரங்களில் அரசுகள் சரியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அதேபோல, இந்தியாவில் உள்ள 20,000 கிறிஸ்தவ அமைப்புகளின் FCRA பதிவை மோடி அரசு ரத்து செய்தபோது எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.

தவெக ஆட்சிக்கு வந்ததும் அந்த எஃப்சிஆர்ஏ பதிவை மீட்டுத் தந்துவிடுவாரா? பாஜக என்ன சொன்னாலும், அதைச் செய்துவிட்டு அந்த பழியை சட்டென்று வேறு ஒருவர் மீது தூக்கிப் போட்டுவிடுவார்கள்.

கொத்து பரோட்டோ பேச்சு

தமிழ்நாட்டில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளே மேலோங்கியுள்ளன. மேடைகளில் பேசுவதற்காக எம்எல்ஏக்களை கைது செய்கிறார்கள். "5 நிமிடத்தில் உங்களைக் கொத்து பரோட்டா போட்டுவிடுவோம்' என்று விஜய் பேசியதை, "முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சாரைக் கண்டதுண்டமாக வெட்டிப் போட்டுவிடுவேன்" என மிரட்டினார் என்று பொருள் கொண்டு நாளை திமுக வழக்கறிஞர்கள் கோர்ட்டுக்கு போனால் என்னவாகும்? வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டே இருந்தால், அரசு எப்போது மக்களுக்கு ஆட்சி செய்யும்?

ஜூன், ஜூலை மாதங்களில் காவிரி நீர் வரவில்லை.. மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி விமர்சிப்பவர்களையும் யூடியூபர்களையும் கைது செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வேண்டும்.. எச்ஆர்என்சி மற்றும் பத்திரப்பதிவுத் துறை ஊழலைச் சுட்டிக்காட்டியவர்களை கைது செய்கிறீர்கள். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை.

வைகோவுக்கு நோபல் பரிசு

முதலமைச்சருக்கு தெரியாமல் அதிகாரிகள் செயல்படுகிறார்களா அல்லது போலீசார் அவரது கட்டுப்பாட்டில் இல்லையா? அடுத்தவர் மீது வழக்கு போடுவது என்ன பெரிய சரித்திர சாதனைப் படைப்பா?

ஜனநாயகன் படத்தில் முதலமைச்சர் நடித்ததற்காக அவருக்கு ஆஸ்கார் விருதோ அல்லது நோபல் பரிசோ வழங்கப் பரிந்துரைக்கலாம். இப்போது நோபல் பரிசு கமிட்டியின் தலைவராக வைக்கோதான் இருக்கிறார் என நினைக்கிறேன்.. அவரே அந்தப் பரிசை வாங்கித் தரலாம். அரசு காட்சிகளை நடத்துவதை நிறுத்திவிட்டு, ஒழுங்காக ஆட்சி நடத்த வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+