தவெக தான் புதிய அதிமுக.. விஜய் ஒரு அரசியல் அதிசயம்.. விஜயபாஸ்கர் பேச்சை பாருங்க

Subscribe to Oneindia Tamil

கரூர்: தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். விஜய் அரசியலில் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார். தவெக தான் புதிய அதிமுக என்று எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கரூரில் நடந்த தவெக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசுகையில், "இந்திய வரலாற்றில் அரசியலில் இரண்டே இரண்டு அதிசயங்கள் நடந்தன. ஒரு அதிசயம் நம் தளபதியை போல, திரையில் முடிசூடா மன்னனாக இருந்த தங்க தலைவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் இயக்கம் ஆரம்பித்த முதல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்து கோவையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.

tvk-is-news-admk-vijay-is-miracle-said-mr-vijayabaskar

தவெக இனி அதிமுக

5 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். 3 முறை முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். அவர் இருந்தவரை தமிழகத்தின் முதலமைச்சராக அவர் மட்டுமே இருந்தார். அதேபோல தளபதி சினிமா துறையில் உச்சம் தொட்ட நடிகராக இருந்தார். அரசியல் கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த வரலாற்று தலைவர் நம் தளபதி அவர்கள் மட்டும் தான். இதற்கு முன்பு இப்படி நடைபெற்றதில்லை. இனிமேலும் இது நடக்காது.

தளபதியால் மட்டும் தான் முடியும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். தலைவர் மேடையிலும் பேசியிருக்கிறார். சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறார். தவெக என்பது இன்னொரு புதிய அதிமுக என்று சொல்லியிருக்கிறார். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. புரட்சி தலைவர், அம்மா காலத்தில் எப்படி நடந்து கொண்டிருந்ததோ, கட்சி வளர்ச்சியடைந்ததோ அப்படித்தான் தவெக வளர்ந்து இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிகாரம் இல்லாமல் வெற்றி

அதிமுகவில் இருக்க கூடிய நிர்வாகிகள் மட்டுமல்ல கீழ்நிலையில் உள்ள உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால் தான் அமைதியாக எந்த விளம்பரமும் இல்லாமல், பணம் செலவு இல்லாமல் 108 எம்எல்ஏக்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இதுதான் சாதனை. தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் இருந்தது. அதிமுகவுக்கும் பெரும்பான்மை இல்லை.

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என் முடிவு செய்தோம். அதற்கு பொதுச்செயலாளர் எதிர்ப்பு தெரிவித்ததால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு தவெகவில் இணைந்துள்ளோம். எந்த அதிகாரமும் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருப்பதுதான் வரலாற்று சாதனை. இந்த வெற்றி சாதனை தொடரும் என்றார். அவரின் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+