விஜய் உடை, ramp walk, துண்டு வீச்சுகளை காப்பி பேஸ்ட் செய்யும் பண்ணையாரே! ஸ்டாலினுக்கு தவெக கண்டனம்
சென்னை: "எங்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை" என்று வெட்டி வசனம் பேசிவிட்டு, வெற்றித் தலைவரின் உடை, ramp walk, எங்கள் தோழர்கள் அன்பாய்த் துண்டு வீசுகிறார்களென உபி கோமாளிக் கூட்டத்தைத் துண்டு வீசச் சொன்னது என அனைத்தையும் Copy-Paste செய்த Copy-Paste பண்ணையாரே! என முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தவெக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த போது அவர் கூறியிருப்பதாவது: இந்த கோமாளி கூட்டத்தை திமுக ஒரு பொருட்டாகவே மதிக்காதது, எஸ்ஐஆரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது உள்ளிட்டவைகளால் தேர்தலில் தோல்வி அடைந்தோம்.

திமுக செய்த சாதனைகளை ஆய்வு செய்வதாக கூறி முதல்வர் செய்யும் ரீல்ஸை கண்டித்தால், இதென்ன உங்க பணத்தில் கட்டியதா என விஜய் கேட்கிறார். அவருக்கு நான் கேட்கிறேன், இதுவரை அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்டோரெல்லாம் நிறைய மக்களுக்கான திட்டங்களை உருவாக்கியுள்ளார்கள், அவர்களையும் சொந்த காசில் கட்டினீர்களா என அவமதிப்பது போல் இருக்கிறது.
தங்கமோதிரம்
ஏன் தங்கமோதிரம் கொடுத்தாரே அது எந்த பணத்தில், அதென்ன இவர் அப்பன் வீட்டு காசிலா கொடுத்தார்? இந்த கோமாளி கூட்டத்தை நம்பி சென்றவர்கள் நட்டாற்றில் நிற்க போகிறார்கள் என ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.
தவெக ஐடி விங் கண்டனம்
இதுகுறித்து தவெக ஐடி விங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: Property comedy செய்து மதுரை முத்துவின் competitor ஆன தோல்வித் தலைவர் அவர்களே! காலம் காலமாய் கட்டுமரக் கதைகளால் கட்டமைத்த போலிப் பிம்பம் உடைந்து போனதில் பதற்றம் குறையவில்லையா? காணொளி வெளியிட்டு விளக்கமளித்தது போதாதென்று, மேடைக்கு மேடை மிசா கைதுக் குறித்து ஒப்பாரி வைக்கிறீர்களே தவிர, detention copy-ஐ மட்டும் காட்ட மறுக்கிறீர்களே?
ஆபாசம், அவதூறு
ஆபாசத்தையும் அவதூறையும் ஆராதிக்கும் கோமாளிக் கூட்டத்தின் தலைவரே! Party fund, ஊழல் என்றால் மட்டும் ஏன் பதறி சட்டமன்றத்தை விட்டு ஓட்டமெடுக்கிறார்கள் திமுக உறுப்பினர்கள்?
அப்பாவின் பேனா
அப்பாவின் பேனாவிற்கு சிலை வைக்கத் துடித்தது யாருடைய அப்பா வீட்டுப் பணமோ என்பதற்காகவா? வான்கோழி என்ற காவியத்தின் புகழைப் பரப்புவதற்காகவா? வாயைத் திறங்க, ஊழல் இலக்கியமே!
ஆபாசநதி- வன்மநதி
ரீல்ஸ் ஆட்சி என்று ரீல்ஸ் போட்டு புலம்பும் ஊழல் பீரோ மன்னனே! உங்களின் ஆபாசநதி, வன்மநதி - குடும்பச் சொத்து நள்ளிரவில் Insta-வில் உலா வருவது எதற்கென, அடுத்து நிகழ்த்தவிருக்கும் ஒன்றுமில்லாத உரையில் விளக்கமளிக்க மறவாதீர்கள். ரீல்ஸ் காணொளி வெளியிட்டு விளக்கமளித்தாலும் மகிழ்ச்சியே!
copy paste செய்த ஸ்டாலின்
"எங்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை" என்று வெட்டி வசனம் பேசிவிட்டு, வெற்றித் தலைவரின் உடை, ramp walk, எங்கள் தோழர்கள் அன்பாய்த் துண்டு வீசுகிறார்களென உபி கோமாளிக் கூட்டத்தைத் துண்டு வீசச் சொன்னது என அனைத்தையும் Copy-Paste செய்த Copy-Paste பண்ணையாரே! பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு பெண்களைத் தொடர்ந்து இழிவாகவும் ஆபாசமாகவும் பேசும் ஆபாசக் கும்பலின் தலைமையே! You continue...
பாடம் புகட்டுவார்கள்
பெண்களும், குழந்தைகளும், மக்களும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் தேர்தலிலும் இனி உங்களுக்குத் தக்கப் பாடம் புகட்டிக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications
