திருமணத்தின் போது பெண்களுக்கு 8 கிராம் தங்கம்.. ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம்! விஜய் வாக்குறுதி
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று பெண்களுக்கான சில வாக்குறுதிகளை அளித்தார். இதில், அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் திருமணத்தின் போது பெண்களுக்கு 8 கிராம் தங்கம், தரமான பட்டுப்புடவை வழங்கப்படும் என்று விஜய் வாக்குறுதி அளித்தார். மேலும் ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அறிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி த.வெ.க. சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட விஜய், சிங்க பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ந்து இன்றைய கூட்டத்தில் பெண்களுக்கான சில தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.

இதில், அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் திருமணம் ஆகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், தரமான பட்டுப்புடவை வழங்கப்படும், பெண்களுக்கு என தனி இலாகா, விஜய் அறிவித்தார். விஜய் அறிவித்த மேலும் சில வாக்குறுதிகளை இங்கு காணலாம்.
* மத்திய, மாநில அரசு பதவிகளில் உள்ளவர்களை தவிர மற்ற அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும்.
* ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்
* எனது நேரடி கண்காணிப்பில், பெண்கள், முதியவர்கள், குழந்தைகளுக்கு என தனி இலாக்காக்கள் ஒதுக்கப்படும்
* பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அஞ்சலை அம்மாள் விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.
* பொது போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்மார்ட் பேனிக் பட்டம் அமைக்கப்படும்.
* ரேஷன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா சானிட்டரி பேட்ஸ் வழங்கப்படும்.
* சிசிடிவி இல்லாத இடங்களே இருக்கக் கூடாது என்பதற்காக ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ் உருவாக்கப்படும்.
* அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா இலவச பயணம்.
* தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் மற்றும் பேபி கிட், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications