10 தோல்வி அடைந்த சேலத்துக்காரரே.. எடப்பாடியை விட்டு வேற தொகுதியில் வெல்ல முடியுமா? விஜய் சவால்!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்த தொகுதியிலேயே தோற்றுவிடுவோம் என்ற பயம் வந்துவிட்டதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். 10 தோல்வி அடைந்த சேலத்துக்காரர், தமிழ்நாட்டில் வேறு தொகுதியில் நின்று வென்று காட்ட முடியுமா என்று சவால்விட்ட விஜய், அதிமுகவை பல்லாங்குழி பாப்பா என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் தனது கடைசி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். வழக்கமாக திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை மட்டுமே விமர்சிக்கும் விஜய், அதிமுகவை மற்றும் பலர் என்று கூறி வந்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சித்துள்ளார். அதில் விஜய் பேசுகையில், பாஜகவின் மிகப்பெரிய அடிமை யார் என்பதில் திமுக மற்றும் அதிமுக இடையில் போட்டி நடக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியில் வர மாட்டார் என்று 10 முறை தேர்தலில் தோல்வி அடைந்த எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். இன்னும் திருந்தாத ஒருத்தவர் சொல்கிறார்.
ஐயா, அனுபவசாலி அவர்களே.. இந்த சேலத்திற்கு அருகில் இருக்கும் ஒரு தொகுதியில் மட்டும் பதுங்கி கொள்ளாமல், தமிழ்நாட்டில் வேறு ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வென்று காட்ட முடியுமா? முதலில் போட்டியிட முடியுமா? அதனை செய்துவிட்டு விஜய்யை பற்றி பேசுங்கள். சொந்த தொகுதியிலேயே தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் நம்முடைய சின்னத்தை திருடியவர் எடப்பாடி பழனிசாமி.
அதன் காரணமாகவே சுயேட்சை வேட்பாளரின் சின்னத்தை நமது சின்னமாக அரவணைத்திருக்கிறோம். அவர் நமக்காக மக்கள் மன்றத்தில் பணியாற்றியவர் தான். அதனால் எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெகவின் டிவி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு ஓனர் இருக்கிறார். அதுதான் பாஜக.
பாஜக அமைச்சர் ஒருவர் என்னை நடிகர் நடிகர் என்று சொல்கிறார். நான் நடிகன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அரசியலில் நான் நடிக்கவில்லை. பாஜகவிடம் சரண்டரானதோடு இல்லாமல், ஊழல் மேல் ஊழல் செய்யும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் புறக்கணிப்போம். மாற்றம் வேண்டுமென்றால் புதிய கட்சிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இந்த தேர்தலில் 75 ஆண்டு கால பவள விழா பாப்பாவையும், 55 ஆண்டு கால பல்லாங்குழி பாப்பாவையும் தூக்கி வீசி எறிவோம். ஒரு நல்ல ஆட்சியை கொண்டு வருவோம். திமுக, அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும், அது பாஜகவுக்கு வாக்களிப்பதை போல்தான். அத்தனை கட்சிகளும் சேர்ந்து விஜய்யை எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு!












Click it and Unblock the Notifications