ரஜினி ஸ்டைலில் விஜய் போட்ட ஸ்கெட்ச்! தேர்தல் ஆணையத்திற்கு பறக்கும் விண்ணப்பம்.. தவெக சின்னம் எது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அடுத்ததாக சின்னத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள சின்னங்களில் தவெகவிற்கு பொருத்தமான சின்னம் எது? மக்களை எளிதில் ரீச் ஆகும் வகையில் சின்னம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்டோ சின்னத்தை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சதித்திரமாக இருப்பவர் விஜய். திரையுலகில் இருந்து அரசியலில் கால் பதித்துள்ள விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். கூட்டணிக்கு தயார் என்றும் தங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிக பேசுபொருளானது.

tvk-leader-vijay-eyes-auto-symbol-for-2026-tn-elections-plans-to-apply-to-the-election-commission

விஜய்யின் கட்சி சின்னம்

திமுகவை தனது அரசியல் எதிரியாகவும் பாஜகவை தனது கொள்கை எதிரியாகவும் அறிவித்து தேர்தலில் களம் இறங்க தயாராகி வரும் விஜய், கட்சியின் உள்கட்டமைப்புகளை பலப்படுத்தி வருகிறார். இதற்காக வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமித்து முடித்துள்ளார். அடுத்தக்கட்டமாக, தேர்தல் சின்னத்தை தேர்வு செய்யும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள சின்னங்களில் தவெகவிற்கு பொருத்தமான சின்னம் எது? மக்களை எளிதில் ரீச் ஆகும் வகையில் சின்னம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தீவிரமாக ஆலோசித்து இருக்கிறார். சின்னம் தேர்வு செய்யும் பணி கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்த நிலையில், தவெக நிர்வாகிகளின் ஒட்டுமொத்த விருப்பமாக, ஆட்டோ சின்னம் தேர்வாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

3 சின்னங்கள் என்னென்ன?

இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்டோ சின்னத்திலேயே, தேர்தலை சந்திக்கலாம் என்று விஜய் முடிவு எடுத்துள்ளாராம். இதற்காக வரும் நவம்பர் மாதம் ஆட்டோ சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விஜய் விண்ணப்பிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில், சின்னம் கேட்டு பதிவு செய்யும்போது 3 சின்னங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அதில் விருப்ப சின்னத்தையும் குறிப்பிட வேண்டியது அவசியம். தேர்தல் ஆணையம் விதிகள் இதுதான். எனவே, ஆட்டோ, நட்சத்திரம், அகல் விளக்கு ஆகிய 3 சின்னங்களை தேர்வு செய்து, விருப்ப சின்னமாக ஆட்டோவை ஒதுக்க வேண்டும் என்று கோர தவெக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினி விரும்பிய ஆட்டோ சின்னம்

ஆட்டோ சின்னத்தை விஜய், விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2020 ஆம் ஆண்டு கட்சி தொடங்க திட்டமிட்டு இருந்தார். ஜெயலலிதா, கருணாநிதி என்ற பெரும் ஆளுமைகள் இல்லாததால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகவும் இந்த வெற்றிடத்தை நிரப்ப தான் அரசியலுக்கு வருவதாகவும் ரஜினி அறிவித்தார்.

ஆனால், கடைசியில் தனது கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டார். ரஜினியும் தனது கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை பெறவே திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில்தான், ஆட்டோ சின்னத்தை விரும்பி பெற தவெகவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆட்டோ சின்னம் சாமானிய மக்களின் மனதில் எளிதில் பதியும் சின்னமாக இருக்கும். இதனால், கட்சி சின்னத்தை கொண்டு சேர்ப்பது எளிது.

உள்ளாட்சி தேர்தலில் கூட

அதுபோக, நடிகர் விஜய் வேட்டைக்காரன் படத்தில் ஆட்டோ ஓட்டி வருவார். எனவே இந்த ஆட்டோவை கட்சிக்கு சின்னமாக பெறுவது பொருத்தமாக இருக்கும் என்று விஜய் தரப்பு நம்புகிறதாம். கட்சி தொடங்குவதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பல இடங்களில் ஆட்டோ சின்னத்தை விருப்பமாக கேட்டிருந்தது. எனவே வரும் தேர்தலில் ஆட்டோ சின்னத்தை பெற்று ஆட்டோவிலே பிரசாரத்தை முன்னெடுக்கவும் தவெகவினர் தயாராகி வருகிறார்களாம்.. விஜய் கட்சி கொடியினிலும் மஞ்சள் நிறம் இருப்பதனாலும், ஆட்டோவும் மஞ்சள் நிறம் என்பதாலும் இதனை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+