தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம்
சென்னை: சென்னையில் இருந்து தனி விமானத்தில் மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார் நடிகரும், தவெக தலைவருமான விஜய். மும்பையில் நண்பரின் குடும்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக விஜய் அங்கு செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 'ஜனநாயகன்' திரைப்பட வேலை தொடர்பாகவும் விஜய் அங்கு செல்வதாகக் கூறப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பதால், படத்தில் சில மாற்றங்களைச் செய்து புதிய காட்சிகளைப் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காகவும், படத்தின் போஸ்ட் ப்ரோடக்க்ஷன் பணிகளுக்காகவும் விஜய் இன்று இரவு தனி விமானம் மூலம் மும்பை சென்று உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே உள்ளது. 'ஜனநாயகன்' திரைப்படத்தை, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தணிக்கை வாரியம் மறு ஆய்வு செய்துள்ளது. அதன் முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படாத சூழலில், தேர்தல் நடத்தை விதிகளால் படம் வெளியாவதில் புதிய நடைமுறைச் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும், வேட்பாளராகவும் கருதப்படும் நடிகர் ஒருவரின் படம் வெளியாகவிருப்பது இதுவே முதல்முறை. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அரசியல் கட்சித் தலைவராக இருக்கும் ஒரு நடிகரின் படம் தேர்தல் நேரத்தில் வெளியாவதற்குத் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி தேவையா? என்பது குறித்து, இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கலந்து ஆலோசித்து விரைவில் விரிவான பதில் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சென்சார் போர்டு, 'ஜனநாயகன்' படத்தை மறு ஆய்வு செய்து, சில காட்சிகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், படத்தில் சில மாற்றங்களைச் செய்து புதிய காட்சிகளைப் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த பணிகளையும் மும்பையில் விஜய் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications