டிஜிட்டல் பிரச்சாரத்தில் அடித்து ஆடும் திமுக, அதிமுக.. அப்படியொன்று இருப்பதையே மறந்துவிட்ட தவெக!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் தவெக மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய் தரப்பு டிஜிட்டல் பிரச்சாரத்தை முற்றிலும் மறந்துவிட்டதாக தெரிகிறது. திமுக மற்றும் அதிமுக டிஜிட்டல் பிரச்சாரங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிய விஜய் டிஜிட்டலில் கவனம் செலுத்தாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அத்தனை கட்சிகளின் பிரச்சாரமும் தீவிரம் அடைந்திருக்கின்றன. ஒவ்வொரு கட்சியின் பிரதான தலைவர்களின் பொதுக்கூட்டம், வாகன பிரச்சாரம், தெருமுனைக் கூட்டம், ரோடு ஷோ, வீடு வீடாக சென்று கூட வாக்கு சேகரித்து வருகின்றனர். இருப்பினும் தேர்தலில் டிஜிட்டல் பிரச்சாரங்கள் மூலமாகவே இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்க முடியும்.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றிநடை போடும் தமிழகமே என்று செய்த பிரச்சாரம், அதற்கு திமுக கிண்டல் செய்து வெளியிட்ட வீடியோவும் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகியது. அதேபோல் கமல்ஹாசன் டார்ச் லைட் கொண்டு டிவியை உடைத்து வெளியிட்ட வீடியோவை யாராலும் மறக்க முடியாது. இந்த முறை திமுக தரப்பில் ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்று டிஜிட்டல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் திமுகவின் வாக்குறுதிகளை சொல்லும் வகையில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8 ஆயிரம் கூப்பன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பிணையில்லா ரூ.5 லட்சம் கடன் உள்ளிட்டவை டிஜிட்டல் பிரச்சாரங்களாக செய்யப்பட்டு வருகின்றன. அதிமுக தரப்பில் திமுகவை கிண்டல் செய்து டிஜிட்டல் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அது பெரியளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், அதிமுகவினர் மத்தியில் எடுபடுகிறது. தற்போது திமுக தரப்பில் பாஜகவை முதுகில் சுமந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி சுற்றி வருவதை போல் உருவாக்கப்பட்டுள்ள வீடியோக்கள் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன. இதுபோன்ற டிஜிட்டல் பிரச்சாரம் மூலமாக நேரடியாக ஒவ்வொரு வீட்டின் தொலைக்காட்சியின் மூலமாக பிரச்சாரம் செய்ய முடியும்.
இதன் காரணமாகவே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் டிஜிட்டல் பிரச்சாரத்தில் முன்னிலையில் இருக்கின்றன. நாம் தமிழர் கட்சியும் கூட இம்முறை டிஜிட்டல் பிரச்சாரத்தை தொலைக்காட்சிகளில் செய்து வருகிறது. ஆனால் சினிமாவில் கோலோச்சிய தவெக தலைவர் விஜய் டிஜிட்டல் பிரச்சாரத்தை முற்றிலும் மறந்துவிட்டதாக தெரிகிறது.
திமுகவை விமர்சித்தோ, தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலோ, எந்தவொரு டிஜிட்டல் பிரச்சாரத்தையும் தவெக முன்னெடுக்கவில்லை. தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடையும் சூழலில், தவெக இதுவரை சிந்தித்ததா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
-
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்!












Click it and Unblock the Notifications