லாக்-அப் மரணம்.. நியாயமும் தீர்ப்பும் வாங்கித் தருவது என் கடமை.. விஜய் செய்து கொடுத்த சத்தியம்!
சென்னை: உங்களுக்கு நியாயமும் தீர்ப்பும் வாங்கி கொடுக்க வேண்டியது எனது கடமை என்று காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி நீதி கிடைக்க தவெக முயற்சிக்கும் என்றும் விஜய் உறுதி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார் காவலர்களின் கொடூரமான தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அஜித் குமார் மரணத்தை கண்டித்து பல்வேறு கட்சிகளும் கண்டன குரல்களை எழுப்பினர்.

அந்த வகையில் தவெக தலைவர் விஜய் அஜித் குமார் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதலை கூறினார். அதேபோல் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும் வழங்கினார். அஜித் குமார் குடும்பத்தினரை சந்திக்க விஜய் வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த நிலையில் நாளை சென்னையில் அஜித் குமார் மரணத்தை கண்டித்து தவெக சார்பாக போராட்டம் நடத்தப்பட உள்ளது.
தவெக தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனிடையே பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் லாக் அப்பில் மரணமடைந்த 18 பேரின் குடும்பத்தினரை விஜய் சந்தித்தார்.
அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் கோரிக்கை மனுவை எழுதி பெற்றுக் கொண்ட விஜய், நாளை நடக்க உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தவெக சார்பாக ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், உங்களுக்கு நியாயமும் தீர்ப்பும் வாங்கி கொடுக்க வேண்டிய எனது கடமை. மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி நீதி கிடைக்க தமிழக வெற்றிக் கழகம் முயற்சிக்கும் என்று உறுதி கொடுத்துள்ளார். நாளை சென்னையில் நடக்கும் போராட்டத்தில் விஜய் கலந்து கொள்ள உள்ளார். அரசியலுக்கு வந்தபின் விஜய் பங்கேற்கும் முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு! -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications