தவெகவில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்.. மாவட்ட செயலாளர்களுக்கு பனையூரில் இருந்து பறந்த உத்தரவு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் இருந்து மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. 25 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் நியமனம் செய்ய தவெக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனை போட்டி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. விஜய்யின் தவெக, வலுவான கூட்டணியை அமைக்க முயன்று வருகிறது. தவெக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் அக்கட்சியினர் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு தீவிரமாக கட்சியை வலுப்படுத்தி வருகிறது. அண்மையில் மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு நடந்தது. இதையடுத்து தவெக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் மாதத்தில் விஜய், தமிழ்நாடு முழுவதும் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம்தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, தவெக தலைமைக் கழகத்தில் இருந்து மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவு பறந்திருக்கிறதாம். அதாவது, தமிழக வெற்றிக் கழகத்தில் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு ஒன்றிய செயலாளர் இருந்த நிலையில், தற்போது 25 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் நியமனம் செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது.
கட்சியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் முறையாக தற்போது வரை நடைபெறாத நிலையில் ஒன்றிய செயலாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வாக்கு சாவடிக்கு, சம்பந்தமே இல்லாத நபர்களை கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களாக நியமனம் செய்திருந்த நிலையில் பூத் முகவர்களை முறையாக நியமனம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் என பிரித்து ஒன்றிய செயலாளர் பொறுப்புகளுக்கு ஆட்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்குள் ஒன்றிய செயலாளர்கள் நியமனத்தை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜய்யின் சுற்றுப்பயணம் தொடர்பாக நேற்று சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்தில் 20 மாவட்ட செயலாளர்களுடன் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது ஒன்றிய செயலாளர்களை நியமிப்பது தொடர்பான இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
ராகவா லாரன்ஸ் விஜய்யின் திருச்சி கிழக்கை குறிவைத்து.. மீண்டும் ஆண்டிப்பட்டி ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா? -
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன் -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட் -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications