Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”SIR”க்கு எதிராக களத்தில் இறங்கிய தவெக.. தமிழகம் முழுக்க இன்று ஆர்ப்பாட்டம்.. விஜய் பங்கேற்பாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகளுக்கு (SIR) எதிர்ப்பு தெரிவித்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. "சார்" நடவடிக்கைகள் வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்றும் தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர் என்றும் தவெக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்கிடையே தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியானது (SIR) தமிழகத்தில் நடந்து வருகிறது. இதற்காக வீடு, வீடாக ஊழியர்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள்.

Vijay Sir protest

தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் சார் பணிகளை எப்படி சரியாக மேற்கொள்ள முடியும் என்றும், இதனால் குழப்பங்கள் ஏற்படும் எனவும் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலினும் "சார்" பணிகளை ஏன் எதிர்க்கிறோம் என்றும், அதில் உள்ள சிக்கல்களை வீடியோ வாயிலாகவும் வெளியிட்டு விளக்கம் அளித்து இருந்தார்.

இதேபோல் ஆரம்பம் முதலே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகளுக்கு (SIR) எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நேற்றும் அந்த கட்சியின் தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு சார் நடைமுறையில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது, நாம் அனைவருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லாமல் போகலாம்.. இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கிற இந்த நேரத்துல தமிழ்நாட்டுல இருக்குற நம்ம யாருக்குமே ஓட்டு போடுற உரிமையே இல்லனு சொன்னா நம்புவீங்களா? என கேட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று தவெக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் "சார்" நடவடிக்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தவெக பொதுச்செயலாளர் என் ஆனந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள், வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்று தமிழகத்தில் இருந்து முதன்முறையாக எதிர்ப்புக் குரல் கொடுத்தது, தமிழக வெற்றிக் கழகம்தான். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.

தமிழக மக்களின் வாக்குரிமையைக் கேள்விக்குறியாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மற்றும் அது சார்ந்த குளறுபடிகளுக்கு எதிராக, நாளை 16.11.2025 காலை 11 மணி முதல், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் கட்சித் தொண்டர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டும். கட்சித் தலைவர் விஜயின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+