தவெகவுக்கு ‘பூஸ்ட்’ தந்த 15 தொகுதிகள்.. சர்ப்ரைஸ் வின்னிங் கிடைக்குமா? எக்சிட் போல் ரிசல்ட் இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்னம்பலம் நடத்திய எக்சிட் போல் கருத்துக்கணிப்பின்படி, தவெக 5 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என்றும், 10 இடங்களில் இரண்டாம் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெகவுக்கு சாதகமான இந்த 15 தொகுதிகள் எவை எவை என்ற லிஸ்ட்டை பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தலில் புதிய வரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் களமிறங்கி உள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் டிவி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளருக்கு தவெக ஆதரவளித்தது. மற்ற 233 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் விசில் சின்னத்தில் களம் கண்டனர்.

Exit Poll Results

வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சூழலில், தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடந்த பின்னர் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று மாலை முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மின்னம்பலம் மீடியா, எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 200 பேர் வீதம் 234 தொகுதிகளிலும் 46,800 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்கப்பட்டு, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது மின்னம்பலம்.

மின்னம்பலம் வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 155 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என மின்னம்பலம் எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. , அதிமுக கூட்டணி 72 இடங்களையும், விஜய்யின் தவெக 5 இடங்களையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

தவெக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ள 5 தொகுதிகள்

பெரம்பூர்
ஆர்.கே.நகர்
கோபிசெட்டிபாளையம்
திருச்செங்கோடு
சேலம் மேற்கு

தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். விஜய் இந்த தொகுதியில் 46% வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் நிலையில் முன்னிலை வகிக்கிறார். திமுகவின் ஆர்டி சேகர் 40% வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராகப் போட்டியிட்டுள்ள திலகபாமா வெறும் 10% வாக்குகளைத்தான் பெறுவார் என்கிறது நமது மின்னம்பலம் எக்ஸிட் போல் முடிவுகள்.

விஜய் போட்டியிட்டுள்ள மற்றொரு தொகுதி திருச்சி கிழக்கு. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக இனிகோ இருதயராஜ், அதிமுக வேட்பாளராக ராஜசேகரன், நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணசாமி களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் திமுக 36% வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. தவெக தலைவர் விஜய் 35% வாக்குகளைப் பெறுவார் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் 25%, நாதக வேட்பாளர் கிருஷ்ணசாமி 4% சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

செங்கோட்டையன்

தவெகவில் சீனியர் தலைவர் செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர். கோபிசெட்டிபாளையத்தில் தொடர்ந்து அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்று வந்த செங்கோட்டையன் இந்த முறை தவெக வேட்பாளராக களம் கண்டுள்ளார். இந்த தொகுதியில் திமுகவின் என்.நல்லசிவம், அதிமுகவின் விபி பிரபு, நாதகவின் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

இந்த தொகுதியில் செங்கோட்டையன் 33 சதவீத வாக்குகளைப் பெறுகிறார். திமுகவின் நல்லசிவம் 32 சதவீத வாக்குகளையும் அதிமுகவின் விபி பிரபு 29% வாக்குகளையும் நாதக சீதாலட்சுமி 6% வாக்குகளையும் பெறுகின்றனர் என மின்னம்பலம் எக்சிட் போலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஸ்ஸி ஆனந்த்

சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போட்டியிட்டுள்ளார். திமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மகன் ராஜா அன்பழகன். அதிமுக வேட்பாளராக சத்யா, நாதக் வேட்பாளராக அனுஷா களம் கண்டுள்ளனர்.

இந்த தொகுதியில் அதிமுகவின் தி.நகர் சத்யா 32 சதவீத வாக்குகள் பெற வாய்ப்புள்ளது. திமுகவின் ராஜா அன்பழகன் 30 சதவீத வாக்குகளையும் தவெகவின் புஸ்ஸி ஆனந்த் 30 சதவீத வாக்குகளையும் பெறுகின்றனர்.

ஆதவ் அர்ஜுனா

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிட்டுள்ளார். திமுக வேட்பாளராக கார்த்திக் மோகன், அதிமுகவின் விஜயகுமார், நாதகவின் ரோஷினி களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் திமுகவின் கார்த்திக் மோகன் 36%. தவெகவின் ஆதவ் அர்ஜூனா 32%, அதிமுகவின் விஜயகுமார் 26%, நாதகவின் ரோஷினி 5% வாக்குகளைப் பெறக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருண் ராஜ்

தவெகவின் மற்றொரு முக்கிய முகமான முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் - திமுக கூட்டணி வேட்பாளராக உதயசூரியன் சின்னத்திலும் அதிமுகவின் சந்திரசேகர், நாதகவின் ரேவதி ஆகியோரும் களம் கண்டுள்ளனர்.

இத்தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்ராஜ் 31 சதவீத வாக்குகளையும் திமுக கூட்டணியின் ஈஸ்வரன் 30 சதவீத வாக்குகளையும் அதிமுகவின் சந்திரசேகர் 30 சதவீத வாக்குகளையும் நாதகவின் ரேவதி 8 சதவீத வாக்குகளையும் பெறுகின்றனர்.

சேலம் மேற்கு - ட்விஸ்ட்

சேலம் மேற்கு தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ், பாமக சார்பில் கார்த்தி, தவெக சார்பில் லட்சுமணன், நாதக சார்பில் சுரேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அந்த தொகுதியில் தவெக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக மின்னம்பலம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர்

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற ஜெ.ஜான் எபினேசர் திமுக வேட்பாளராக மீண்டும் களம் இறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ், தவெக சார்பில் மரிய வில்சன், நாம் தமிழர் கட்சி சார்பில் வெண்ணிலா தாயுமானவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் தவெக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக மின்னம்பலம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக 2-வது இடம் பிடிக்க வாய்ப்புள்ள தொகுதிகள்

தவெக 10 தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக மின்னம்பலம் எக்சிட் போல் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 10 தொகுதிகள் லிஸ்ட் வருமாறு:

திருச்சி (கிழக்கு)
வில்லிவாக்கம்
ராயபுரம்
அறந்தாங்கி
எழும்பூர் (தனி)
தியாகராய நகர்
மயிலாப்பூர்
காரைக்குடி
கொளத்தூர்
பாளையங்கோட்டை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+