மாநாட்டை விட இதுதான் பெரிய மேட்டர்.. திமுக, அதிமுகவிற்கு விஜய் அனுப்பிய சைலண்ட் மெசேஜ்.. பயங்கரம்
சென்னை: மதுரையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடக்க உள்ள நிலையில் இப்போதே 75000 பேர் வரை மாநாட்டு திடலில் திரண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த மாநாட்டிற்கு கூடும் கூட்டம், அதற்கான ஏற்பாடுகளை விட வேறு ஒரு விஷயம்தான் கவனம் ஈர்த்து உள்ளது.
முக்கியமாக திமுக, அதிமுகவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விஜய் சத்தமே இல்லாமல் முக்கிய மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். கடந்த இரண்டு நாட்கள் முன்பு வரை கூலி விமர்சனங்கள் உச்சத்தில் இருந்த நிலையில் இரண்டு நாட்களாக இணையம் முழுக்க தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு பற்றிய போஸ்டுகள்தான் உள்ளன.

இணையத்தை ஆக்கிரமித்த தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு
இணையம் முழுக்க இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தொடங்கி யூ டியூப் வரை தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு பற்றிய வீடியோக்கள், போஸ்டுகள்தான் உள்ளன. முக்கியமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மொத்தத்தையும் இந்த மாநாடுதான் ஆக்கிரமித்து உள்ளது. ட்விட்டரில் நேற்று காலையில் இருந்தே இந்த மாநாடு பற்றி பல லட்சம் போஸ்டுகள் உள்ளன.
ஆளும் கட்சி திமுக, எதிர்க்கட்சி அதிமுக, தேசிய அளவில் ஆளும் கட்சி பாஜகவிற்கு இணையாக சமூக வலைத்தளங்களில் வேகமாக டிரெண்ட் செய்ய முடியும் என்பதை விஜய் சத்தமின்றி நிரூபித்துள்ளார். முக்கியமாக திமுக, அதிமுகவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விஜய் சத்தமே இல்லாமல் முக்கிய மெசேஜ் ஒன்றை இதன் மூலம் அனுப்பி உள்ளார்.
அரசியலில் ஆக்டிவாக இருக்கிறாரோ இல்லையோ, அரசியல் செய்ய தெரிகிறதோ இல்லையோ எங்கள் ஐடி விங் பலம் வேறு மாதிரி என்பதை விஜய் நிரூபித்து இருக்கிறார். விஜய் தனது ஐடி விங் தரப்பிற்கு இது தொடர்பாக முக்கியமான உத்தரவு ஒன்று பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1 வாரமாக இணையம் மற்றும் செய்திகளில் கூலி படமே உச்சத்தில் உள்ளது. கூலி படம் பற்றியே நெட்டிசன்கள், மக்கள் பேசி வருகிறார்கள்.
கூலி படத்தால் விஜய்க்கு வந்த சிக்கல்
நல்லதோ, கெட்டதோ கூலி படத்தை பற்றியே பேச்சு அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடப்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடக்கிறது என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.
இதையடுத்தே தமிழக வெற்றிக் கழக ஐடி விங் உடனடியாக தமிழக வெற்றிக் கழக மாநாட்டை டிரெண்ட் செய்ய வேண்டும் என்று விஜய் சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளதாம். இதன் காரணமாகவே நேற்று முதல்நாள் காலையில் இருந்து தீவிரமாக #TVKMaduraiMaanadu, #தமிழகவெற்றிக்கழகமாநாடு போன்ற வார்த்தைகள் டிரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன. மீட்டிங் இன்று இருந்தாலும் நேற்றில் இருந்தே அதை டிரெண்ட் செய்ய இதுவே காரணம் என்கிறார்கள்.
அதிலும் ஓரளவிற்கு தவெக ஐடி விங் வெற்றியும் பெற்றுள்ளது என்றுதான் கூற வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக மட்டுமல்லாமல் இன்றும் இணையம் மொத்தத்தையும் தமிழக வெற்றிக் கழகம் தனது மீட்டிங் மூலம் ஆக்கிரமித்து உள்ளது.












Click it and Unblock the Notifications