அண்ணா, அம்மா, அப்பா..எடுபடுமா ‘தாய்மாமன்’ அரசியல்? மதுரை தவெக மாநாட்டில் ஆர்ப்பரித்த ’தலைவர்’ விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அரசியல்வாதிகளிடையே விமர்சனத்தை பெற்றிருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்று இருக்கிறது. குறிப்பாக விஜயின் தாய்மாமன் பேச்சு பெண்கள் மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களை கவர்ந்திருப்பதாக கூறுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர், அண்ணா, தலைவர், அம்மா, அப்பா வரிசையில் விஜயின் தாய்மாமன் அரசியல் நிச்சயம் வெற்றியைத் தரும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் குறித்த பேச்சு தான் அரசியல், தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் என அனைத்து தளத்திலும் பேசப்பட்டு வருகிறது/ காரணம் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு.
தவெக கட்சியை ஆரம்பித்ததும் முதல் மாநில மாநாட்டை விஜய் வடமாவட்டமான விழுப்புரத்தில் நடத்தி இருந்தார். இந்த நிலையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது மாநாட்டை நடத்த அவர் தேர்ந்தெடுத்தது மதுரையை..

தமிழக அரசியல்
காரணம் தமிழக அரசியலில் மதுரையில் நடைபெறும் மாநாடுகள் என்றாலே முக்கியத்துவம் வாய்ந்ததாக தான் இருக்கும். எம்ஜிஆர்-ன் அரசியல் திருப்புமுனை மாநாடு, ஜெயலலிதாவின் 2011 பொதுக்கூட்டம், மக்கள் நீதி மய்யத்தின் முதல் மாநாடு, தேமுதிக உருவாகியது என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகள் மதுரையில் நடந்திருக்கிறது. அதனால் தான் தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்தி இருந்தார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம்
எதிர்பார்த்ததை விட மாநாட்டுக்கு அதிகம் அதிக கூட்டம் வந்ததால் உற்சாகம் அடைந்த விஜய், கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசுயிருக்கிறார். அதிமுக, பாஜக, திமுக என வழக்கத்தை விட அந்த கட்சியின் தலைவர்களை விஜய் விமர்சித்து பேசியது தமிழக அரசியலில் பேசு பொருளாக இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் ஏறத்தாழ அனைத்து அரசியல் கட்சிகளும் விஜயின் பேச்சை விமர்சித்து இருக்கின்றன. அதே நேரத்தில் விஜயின் பேச்சு பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
மதுரை மாநாடு
குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மத்தியில் விஜயின் பேச்சு நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என அடித்து கூறுகின்றனர். தனது படங்களில் வருவதைப் போலவே விஜய் பஞ்ச் டயலாக் பேசியதாக குற்றம் சாட்டினாலும், தமிழகத்தின் அனைத்து சகோதரிகளின் குழந்தைகளுக்கும் நான் தாய்மாமனாக இருப்பேன் என்ற விஜயின் பேச்சு பெண்களுடைய மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.
பெண் வாக்காளர்கள்
மேலும் முதல் தலைமுறை வாக்காளர்கள், 20 வயது முதல் 40 வயது உட்பட்ட இளைஞர்கள், பெண்கள், மாணவ மாணவிகள் என விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்திருக்கிறது. 2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, ஆனால் அந்த தேர்தல் மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்கின்றனர். அண்ணா, அம்மா, சென்டிமென்ட் எப்படி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கை கொடுத்ததோ? அதேபோல தாய்மாமன் பாலிடிக்ஸ் விஜய்க்கு கை கொடுக்கும் என்கின்றனர்.
விஜய் தாக்கம்
வரவேற்பு விமர்சனமும் எதுவாக இருந்தாலும் கடந்த சில நாட்களாகவும், வரும் வாரம் முழுவதும் விஜயை சுற்றி தான் இருக்கும். அரசியலைப் பொறுத்தவரை ஊடக வெளிச்சமும் விமர்சனங்களும் தான் அரசியல்வாதிக்கு தேவையானது. தற்போது அது விஜய்க்கு இயற்கையாகவே கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் மூத்த அரசியல் கட்சித் தலைவர்களை அங்கிள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பது போன்றவற்றை தவிர்த்து இருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன! -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி












Click it and Unblock the Notifications