சோழிங்கநல்லூர் தவெக எம்எல்ஏ ஈசிஆர் சரவணனை களம் எட்டில் புரட்டி எடுக்கும் தவெகவினர்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஜெயித்ததைக் கொண்டாடியது குற்றமா?" என்பது போல், சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏ ஈசிஆர் சரவணனைச் சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினரே கடுமையான விமர்சனங்களால் புரட்டி எடுத்து வருகின்றனர்.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் கட்சி வெற்றி பெற்றதைப் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கொண்டாடிய வீடியோவை ஈசிஆர் சரவணன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவைக் குறிப்பிட்டு (Tag செய்து) பலரும் ஈசிஆர் சரவணனைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். "போஸ்டர், பேனர்கள் வைத்து கட்சிக்குக் களங்கம் உண்டாக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று தொண்டர்கள் எச்சரித்து வருகின்றனர். சிலர் "ஈசிஆர் சரவணனை ஓரங்கட்டுங்கள்" என்று தவெக தலைவர் விஜய்யைக் குறிப்பிட்டுப் பதிவிட்டு வருவதையும் காண முடிகிறது.

TVK members are criticizing ECR Saravanan the party s MLA for Sholinganallur what is the reason

கடந்த 6-ஆம் தேதி நடந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் இரண்டு தொகுதிகளிலுமே தவெக வெற்றி பெற்றுள்ளது. தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவும், மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமாரவேலும் வெற்றி பெற்றனர். இரண்டு தொகுதிகளிலும் ஆளும் திமுக இரண்டாம் இடத்தையும், அதிமுக மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

தவெக மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நாடு முழுவதும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். அப்படித்தான் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏ ஈசிஆர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் கொண்டாட்ட வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ஈசிஆர் சரவணன், "தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பில் பனையூர் அலுவலகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது" என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஈசிஆர் சரவணன், தலைவர் விஜய்யின் புகைப்படத்தைக் கையில் ஏந்தியபடி வர, அவரைச் சுற்றி நிர்வாகிகள் ஆரவாரமாகக் கொண்டாடுகின்றனர்.

ஆனால், இந்த வீடியோவைப் பகிர்ந்த சில நிமிடங்களிலிருந்தே, ஈசிஆர் சரவணனுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டிய தவெகவினரும் அரசியல் விமர்சகர்களும் அவரைத்தான் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். "பேனர், போஸ்டர் வைத்து கட்சிக்கு தர்மசங்கடமான நிலையை உருவாக்காதீர்கள்; மக்களிடம் எங்களால் பதிலளிக்க முடியவில்லை" என்று தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது பதிவில், "முதல்வர் விஜய், ஈசிஆர் சரவணனைக் கட்டிப்போட வேண்டும்" என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இனிமேல் கொண்டாட்டங்களோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஊர் முழுவதும் விளம்பரப் பேனர்கள் வைத்தால் அது கட்சிக்குத்தான் கெட்ட பெயராக முடியும் என்றும் கடுமையான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக, ஈசிஆர் சரவணன் எம்.எல்.ஏ இனி ஈசிஆர் (ECR) மற்றும் ஓஎம்ஆர் (OMR) சாலைகளில் எங்குமே பேனர்கள் வைக்கக் கூடாது என்று தவெகவினரே அவருக்குக் காரசாரமாகப் பதிலளித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+