ஆபாச நிதிகள்.. உதயநிதியை ரவுண்டு கட்டி விமர்சிக்கும் தவெக அமைச்சர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி நீர் விவகாரம் தமிழக, கர்நாடகா மாநிலங்களில் பெரும் பரபரப்பாகியுள்ளது. தண்ணீர் வழங்க வேண்டுமென தமிழகத்திலும், தண்ணீர் திறந்துவிடக்கூடாது என கர்நாடகாவிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தஞ்சாவூர் நேற்று திமுக நடத்திய போராட்டத்தில் முதலமைச்சர் விஜயை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி,சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார். உதயநிதியை 'ஆபாசநிதி' என்று விமர்சித்து தவெக அமைச்சர்கள் கடுமையான கண்டனங்களை வைத்து வருகிறார்கள்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாமல் அணை கட்டுவதில் கறாராக உள்ளது. தண்ணீர் திறந்துவிட கோரி தமிழகத்திலும், தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று கர்நாடகாவிலும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிபிஐ, தேமுதிக கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது.

Udhayanidhi Ministers

உதயநிதி சர்ச்சை பேச்சு

அதில் எதிர்க்கட்சி தலைவரும், அக்கட்சி இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். போராட்டத்தில் பேசிய உதயநிதி விஜய் குறித்து தான் அதிகம் விமர்சனம் செய்தார். நடிகை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு விஜயை விமர்சனம் செய்தது சர்ச்சையானது. உதயநிதியின் பேச்சுக்கு தவெக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். உதயநிதியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தவெக போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.
அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?

மக்கள் பார்க்கிறார்கள்

மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும்.

மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை. அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல. அறிஞர் அண்ணா பாணியில் 'வசவாளர்கள் வாழ்க' என்று சொல்லலாம். ஆனால், ஆபாசநிதிகளை. மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் முதலமைச்சர் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

ஆபாச பேச்சு காது கூசுது

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி. ரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் 'ஆபாச'நிதி. தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராய்கூட அல்ல, அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார்.

அண்ணா உருவாக்கிய அறிவாலயமான திமுகவை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்ட ஆபாசநிதி. பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாச பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா - தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

கடும் கண்டனம்

இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் திமுகவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள். ஆனால் இப்போது, பொது மேடைகளிலேயே தனது குரூர எண்ணத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் ஆபாசநிதியை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தே துடைத்தெறிவார்கள் தமிழ்நாட்டின் தாய்மார்களும், பெண்களும்!
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்" என்று கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த பேச்சு ஏற்க முடியாது. ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+