ராணிப்பேட்டையில் இல்லாத ஜே.கே. நிறுவனத்தை மூடச் சொன்னது ஏன்? தவெக எம்எல்ஏ தாஹிரா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜே.கே. டயர்ஸ் குறித்து நான் பேசியிருக்கக் கூடாது, எனக்கு டைப் செய்து கொடுத்தவர்கள் எழுத்து பிழையாக ஜே.கே டயர்ஸ் என குறிப்பிட்டுவிட்டார்கள் என ராணிப்பேட்டை தவெக எம்எல்ஏ தாஹிரா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பாலிமர் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஜே.கே. டயர்ஸ் தொழிற்சாலை குறித்து சட்டசபையில் பேசியது எனது தவறுதான். எனக்கு டைப் செய்து கொடுத்தவர்கள் எழுத்துப் பிழை செய்துவிட்டார்கள். ஜே.கே. டயர்ஸ் குறித்து நான் பேசியிருக்கக் கூடாது.

TVK MLA Thahira

ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்துவிட்டதால் நான் அப்படியே பேசிவிட்டேன். நான் பேச வந்த நிறுவனம் அம்மூரில் இருப்பது, ஆனால் தவறுதலாக பேசிவிட்டேன் என தாஹிரா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் மானியக் கோரிக்களை மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிரா நேற்றைய தினம் சட்டசபையில் பேசும் போது, "ஜே.கே. டயர்ஸ் கம்பெனி இருக்கிறது. இவர்கள் இரவெல்லாம் டயர்களை எரிய விடுகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.

இதை எதிர்த்து கடந்த ஆட்சியின் போது அப்பகுதி மக்கள் போராட்டம் செய்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நமது ஆட்சியிலாவது அந்த நிறுவனத்தை கண்டிப்பாக மூட வேண்டும். அந்த கம்பெனி நமக்குத் தேவையில்லை என்றார்.

இதற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், "அந்த நிறுவனம் குறித்த தகவல்களை எல்லாம் கொடுங்கள். இன்றே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆய்வு செய்ய சொல்கிறேன். உங்களுக்கு அறிக்கையை தருகிறேன்" என்றார்.

இதையடுத்து தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், "ஜே.கே.டயர்ஸ் ஆலையை மூட வேண்டும் என சொல்லியிருந்தீர்கள். ஆனால் கண்டிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். எல்லா கம்பெனிகளும் இயங்க வேண்டும். அதே நேரத்தில் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் விதமாக நடவடிக்கை எடுத்து நிறுவனங்களுக்கான சட்டத் திருத்தங்களை வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிலையில் ராணிப்பேட்டையில் ஜே.கே. டயர்ஸ் என்ற ஆலையே இல்லையாம். இல்லாத ஒரு நிறுவனத்தை எம்எல்ஏ மூடச் சொல்லியிருப்பதும், அதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என இரு அமைச்சர்கள் சொல்லியிருப்பதும் சமூகவலைதளங்களில் கிண்டலுக்குள்ளாகியுள்ளன.

இதுகுறித்து திமுக முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தவெக எம்எல்ஏ மூடச் சொன்ன ஜே.கே. டயர்ஸ் நிறுவனத்தை பற்றி நான் தேடினேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு ஆலை இருப்பது எனக்கு தெரியும். ஆனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்று இருப்பது எனக்குத் தெரியாது. அதனால் ஜே.கே.டயருக்குத் தயாரித்து வழங்கும் பெரிய துணை நிறுவனங்களாவது இருக்கிறதா என தேடி பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை.

ஜே.கே.டயர்ஸ் நிறுவனம் குறித்து எனக்கு ஏன் தெரியவில்லை என நன்கு ஆராய்ந்தேன். அப்போதுதான் தவெக எம்எல்ஏ டயர் ரீட்ரேடிங் செய்யும் ஒரு சிறிய சில்லறை கடையைத்தான் ஜே.கே. டயர் நிறுவனம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது புரிந்தது. இதை வைத்து தவெக அரசையும் அமைச்சர்களையும் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் டைப்பிங் மிஸ்டேக் என சொல்லி தாஹிரா பூசி மெழுகியுள்ளார் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+