கொளத்தூர் எம்.எல்.ஏ விஎஸ் பாபு உடல்நிலை இப்போ எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நீண்ட காலமாக சிகிச்சையில் இருக்கும் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறது.. தற்போது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியிடச் சொல்கிறேன்" என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூச்சு திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

TVK MLA VS Babu Health Update Minister Arunraj Seeks Latest Medical Report

கடந்த ஒரு மாத காலமாக வி.எஸ்.பாபுவுக்கு மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வி.எஸ்.பாபுவின் உடல்நிலை பற்றிய விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அதிகாரப்பூர்வ அறிக்கைகளாக வெளியிட்டு வருகிறது.

அண்மையில் தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று வி.எஸ்.பாபுவை நலம் விசாரித்தார். எம்ஜிஎம் மருத்துவமனைக்குச் சென்ற முதலமைச்சர், விஎஸ் பாபுவுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் உடல்நலனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவருக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவ வல்லுநர்கள் குழுவிடம் கேட்டறிந்தார்.

வி.எஸ்.பாபுக்கு சிறந்த உயர்தர மருத்துவச் சிகிச்சைகள் தடையின்றி முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அவர் விரைவில் பூரண குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும், தனது மக்கள் பணிகளைத் தொடர்வதற்கும் தேவையான அனைத்து வசதிகளையும் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், தொடர்ந்து, விஎஸ் பாபு உடல்நிலை முன்னேற்றமின்றி இருந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த சில நாட்களாக மருத்துவமனை தரப்பில் இருந்தும் எந்த அறிக்கையும் வெளிவரவில்லை.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜிடம், தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "நீண்ட காலமாக சிகிச்சையில் இருக்கும் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறது. தற்போது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியிட சொல்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+