ஆட்டோவுலதான் வறோம்.. என்று சொன்ன எம்எல்ஏவுக்கு ஏற்கெனவே சொந்தமா கார் இருக்கு! வெளிவந்த உண்மை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊரிலிருந்து சென்னைக்கு ரயிலில்தான் வருகிறேன். இங்கு இறங்கி.. சட்டமன்றத்திற்கு ஆட்டோவில்தான் வருகிறேன் என்று தவெக எம்எல்ஏ ஒருவர் பேசியிருந்தார். ஆனால் அவருக்கு சொந்தமாக கார் இருக்கிறது என்பது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிய வந்திருக்கிறது. அதேபோல இனோவா கார் கேட்டவருக்கு சொந்தமாக பென்ஸ் இருக்கிறது என்றும் தெரிய வந்திருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வசதி செய்துக்கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று பல்வேறு உறுப்பினர்களும் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, உறுப்பினர்கள் அனைவருக்கும் கார் வழங்கப்படும் என்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அறிவித்திருக்கிறார்.

TVK MLAs

இந்நிலையில் கார் கேட்ட பல எம்எல்ஏக்களுக்கு ஏற்கெனவே சொந்தமாக கார் இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இதற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. தேனி மாவட்டம் பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் சட்டமன்றத்தில் பேசுகையில், "சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் தந்திருக்கும் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் கல்லூரி படிக்கும்போது.. காதல் தோல்வி! வேலையும் இல்லை.. காரும் இல்லை. இன்று வேலையும் கொடுத்திருக்கிறார். காரையும் கொடுத்திருக்கிறார் தலைவர்.

இதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் ரயிலில்தான் ஊரிலிருந்து வருகிறேன். சட்டமன்றத்திற்குள் ஆட்டோவில் வரும்போதெல்லாம் காவலர் பணியாளர்கள் கேட்பார்கள். நான் எம்எல்ஏ என்று சொல்லி ஐடி கார்டை எடுத்து காட்டினாலும் நம்ப மாட்டார்கள். எனவே கார் வழங்கிய முதல்வருக்கு நன்றி" என்று பேசியிருந்தார்.

அதேபோல மொடக்குறிச்சி தவெக எம்எல்எ சண்முகன் பேசுகையில், "கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் சொல்லுகிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.

இதில் முதலில் பேசிய தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரனுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான டாடா டைகர் கார் இருக்கிறது என்பது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல.. இனோவா கார் கேட்ட தவெக எம்எல் சண்முகனுக்கு ரூ.12 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பில் 2 பென்ஸ் கார்கள் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

பெரும்பாலான எம்எல்ஏக்கள் சொந்தமா கார் வைத்திருக்கிறார்கள். வெகு சிலர் மட்டுமே கார் இல்லாத நபர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் அரசு கார் கொடுத்தால் போதுமானது. அதைவிட்டுவிட்டு.. அனைவருக்கும் கார் கொடுப்பது வீண் செலவு என்று எதிர்க்கட்சிகள் கூறியிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+