Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“அடிப்படை அறிவையே நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார்" விஜய் பற்றிய கருத்தால் கொதித்த நாஞ்சில் சம்பத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் “தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக் கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார்.” என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள திடலில் நேற்று (பிப்ரவரி 13) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார்” என விஜய் பேசினார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது.

TVK Nanjil Sampath Accuses BJP Leader Nainar Nagendran of Lacking Political Decorum

நயினார் சொன்ன வார்த்தை

அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும். குடும்பங்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும்." என்றார். நயினார் நாகேந்திரனின் இந்த கருத்தால் தவெகவினர் கொதித்துப்போய் உள்ளனர். நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாஞ்சில் சம்பத் கொதிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக் கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.

அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா? 4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா?

கறைகளை கழுவுங்கள்

முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது; உங்கள் அறிவைக் குருடாக்கிவிட்டது. பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+