மயானம் அமைக்க எதிர்ப்பு.. தேனியில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை! தள்ளுமுள்ளு.. பொதுமக்கள் காயம்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனியில் பழைய பள்ளிவாசல் பகுதியில் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஆட்சியர் அலுவலக கேட்டை திறந்துகொண்டு உள்ளே செல்ல முயன்ற மக்களை போலீசார் தடுத்தனர். எனினும் போலீசாரையும் இடித்து தள்ளிக்கொண்டு மக்கள் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தேனி - அல்லிநகரம் நகராட்சியின் 29-வது வார்டு பகுதி மக்கள், தங்கள் பகுதியில் 5 தலைமுறைகளாக வசித்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Theni cremation ground protest

மேலும், தங்கள் பகுதியில் உள்ள நகராட்சி மயானம் அருகே காலியாக உள்ள அரசு நிலத்தில் மயானம் அமைப்பதற்கு பதிலாக, அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம் உள்ளிட்ட அத்தியாவசிய பொது கட்டமைப்புகளை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அல்லிநகரம் 29-வார்டு பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கோஷங்களை எழுப்பியபடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

அவர்கள் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றபோது, போலீசார் நுழைவாயிலை அடைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் நுழைவாயிலை திறந்து கொண்டு உள்ளே செல்ல முயன்றதால், இருதரப்புக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Theni cremation ground protest

இதில் சிலர் கீழே விழுந்ததுடன், ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+