தவெக செயல்வீரர்கள் கூட்டம்.. விசில் அடித்து வரவேற்ற நிர்வாகிகள்.. அதிர்ந்த அரங்கம்! காதை பொத்திய விஜய்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேடைக்கு விஜய் வந்ததும் தொண்டர்கள் விசில் அடித்து வரவேற்றனர். க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 20 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரைக் குழு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மாநில மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ள நிலையில் க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி காலை முதலே நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். வரும் வழியில் எல்லாம் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை தவெகவுக்கு வழங்கிய நிலையில் அதனை மக்கள் மத்தியில் சேர்க்கும் விதமாக விசில் அடித்தபடியே வந்ததை பார்க்க முடிந்தது.

விஜய் கூட்டத்திற்கு வந்ததும் தொண்டர்கள், நிர்வாகிகள் விசில் அடித்து அவரை வரவேற்றனர். விசில் சத்தம் காதை பிளந்த நிலையில் விஜய் காதை மூடியபடி வந்தார். தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார். மேடையில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
மேலும் ஜனநாயகன் படத்திற்கான தணிக்கைச் சான்று விவகாரம், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை என தொடர் நெருக்கடிகளை சந்தித்து வரும் அக்கட்சியின் தலைவர் விஜய், தலைமையில் நடைபெறவுள்ள இன்றைய ஆலோசனை கூட்டம் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு நாட்கள் நெருங்கிவிட்ட நிலையில் தவெக தனித்து தான் போட்டியா என்பதும் இன்று தெரிய வரும் எனவும் கூறப்படுகிறது. அதிமுக பாஜக கூட்டணிக்கு டிடிவி தினகரன் சென்று விட்டதாலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுக பக்கம் சென்றதாலும் இதுவரை யாரும் விஜய் பக்கம் வருவதாக தெரியவில்லை. விஜயகாந்தின் தேமுதிகவும் திமுக மற்றும் அதிமுக - பாஜக கூட்டணியில் சேருவதற்கான பேச்சுவார்த்தையைத் தான் நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று சொல்லியும் யாரும் விஜய் பக்கம் வர முனைப்பு காட்டவில்லை என்றே தற்போதைய நிலையில் தெரிகிறது. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில், விஜய் தனியாக வருவாரா அல்லது அணியாக வருவாரா என்பது இந்த கூட்டத்தில் தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு












Click it and Unblock the Notifications