''ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல்களின் அடியாட்கள்''! ஏ.பி.வி.பி அமைப்பை தடை செய்ய வேண்டும்! -வேல்முருகன்
ஏ.பி.வி.பி அமைப்பை தடை செய்யச் சொல்லும் வேல்முருகன்.
சென்னை: அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை தடை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் போர்க்குரல் உயர்த்தியுள்ளார்.
ஏபிவிபி அமைப்பை ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல்களின் அடியாள் என அவர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல்களின் அடியாள் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் வன்முறையும், வெறியாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோடி அரசின் அதிகார பலமும், ஆர்.எஸ்.எஸ்-ன் மனித குல விரோத கொள்கையும் அவர்களின் பின்புலமாக இருக்கிறது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், அவ்வப்போது, அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் கும்பல், கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஆனால், இதுவரை பாரதிய வித்யார்த்தி அமைப்பினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், பொறுப்பற்ற முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டு வருவதோடு, அக்கும்பலுக்கு துணை நிற்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நிலையில், அவர்களை முற்றிலும் ஒழித்து கட்டுவதற்காகவே, இத்தகையை தாக்குதல் அரங்கேற்றப் பட்டிருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டு மாணவர்களை தாக்கிய குண்டர்களை உடனே பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications