காவிரி நீர் பங்கீடு... மத்திய அரசை நம்பினால்... நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இல்லை -வேல்முருகன்
சென்னை: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசை நம்பினால் தமிழர்களை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு பிச்சை போடுகிறதா காவிரி மேலாண்மை ஆணையம் என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ள அவர் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல் பின்வருமாறு;

காவிரி நீர்
காவிரி மேலாண்மை கூட்டம் முடிந்த அடுத்த நாள், சில ஊடகங்களில், தமிழ்நாட்டிற்கு 33.7 டி.எம்.சி நீரை திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பணித் தலைவர் எஸ்.கே. ஹல்தார், தமிழ்நாட்டிற்கு 33.7 டி.எம்.சி நீரை திறந்து விடக்கோரி உத்தரவிடவில்லை என்ற செய்தி ஆங்கில இந்து நாளேட்டில் 28.09.2021 அன்று வெளியாகி உள்ளது.

குத்துமதிப்பாக
மேலும், தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய நீரை திறந்து விடு எனக்கூறாமல், கடந்த 30 ஆண்டு சராசரியை ஒப்பிட்டால் மேட்டூர் அணையில் நீர் பற்றாக்குறை இருக்கிறது. எனவே, அதையாவது கர்நாடகம் திறக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக எஸ்.கே. ஹல்தார் தெரிவித்துள்ளார். முக்கியமாக, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நீர் திறக்க வேண்டும் எனக் குறிப்பிடாமல், குத்துமதிப்பாக நீர் திறக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார் எஸ்.கே.ஹல்தார்.

பிச்சைப்போடும்
அதாவது, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீர் உரிமையை மறுத்து, போனால் போகட்டும் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விடுங்கள் என பிச்சையிடும் தோனியில் எஸ்.கே.ஹல்தார் பேசியுள்ளார். எஸ்.கே.ஹல்தார் அவர்களின் பேட்டியின் மூலமாக, காவிரி மேலாண்மை ஆணையமா, இல்லை கட்டப்பஞ்சாயத்து ஆணையமா என்ற கேள்வி நமக்கு இயல்பாகவே எழுகிறது.

ஏமாளிகள்
தமிழ்நாட்டின் உரிமையை பெற்று தராத, பயனற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை நம்பி பயனில்லை. அதோடு, காவிரி மேலாண்மை ஆணையம் என்பது மோசடி ஆணையம் என்பது நமக்கு கடந்த கால அனுபவங்கள் பாடம் கற்பித்துள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு காவிரி நீர் உரிமையை பெற்றுத் தரும் என நாம் நினைத்தால், தமிழர்களைத் தவிர ஏமாளிகள் யாரும் இருக்க முடியாது. இதுவும் கடந்த கால கற்பிதங்கள் தான்.

வேண்டுகோள்
எனவே, 2021 ஜீன் மாதத்திலிருந்து செப்டம்பர் 26 வரை கர்நாடகம் காவிரியில் திறந்துவிட்டிருக்க வேண்டிய 33.7 டி.எம்.சி நீரை பெறுவதற்கு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

அனைத்துக் கட்சி
காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைத்து விட்டு, தன்னாட்சி அதிகாரமுள்ள ஆணையத்தை அமைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications