விஜய் சொன்ன அந்த வார்த்தை.. பாஜகவுடன் கூட்டணி கிடையவே கிடையாதாம்.. அதிமுகவுக்கும் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பாஜக உடன் கூடிக் குலைந்து கூட்டணி அமைக்க இது திமுக, அதிமுக இல்லை, தவெக என அதிரடியாகப் பேசியுள்ளார் விஜய்.

இதன் மூலம் தவெக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வர வேண்டும் என அதிமுக, பாஜக விடுத்து வந்த அழைப்பை நடிகர் விஜய் கடுமையாக நிராகரித்துள்ளார்.

TVK Vijay 2026 assembly election

தவெக செயற்குழு

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவரான விஜய் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதாக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தவெக செயற்குழு கூட்டத்தில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, பாஜக, அதிமுகவுக்கு இந்த தீர்மானம் ஷாக் கொடுத்துள்ளது.

பாஜக அதிமுக கூட்டணி

முன்னதாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்போது, ஆட்சியில் தவெக பங்கு கேட்டதாகக் கூறப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்தது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற பொது நோக்கில் கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுகவும் பாஜகவும் அறிவித்துள்ளன. இன்னும் பாமக, தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் உள்ளனர்.

தவெகவுக்கு அழைப்பு விடுத்த பாஜக, அதிமுக

அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுமே சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க விஜய் தலைமையிலான தவெக தங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தன. பாஜக தலைவர்கள், திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்து வந்தனர்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் எனக் கூறி இருந்தார். அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்களும் தவெக, தங்கள் கூட்டணியில் இணையக்கூடும் எனப் பேசி வந்தனர்.

முதல்வர் வேட்பாளர் விஜய்

இந்நிலையில் தான் தவெகவின் செயற்குழுக் கூட்டத்தில், நடிகர் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என சிறப்புத் தீர்மானத்தை அதிரடியாக நிறைவேற்றியுள்ளது தவெக. இந்த தீர்மானத்தை தொடர்ந்து தவெக நிர்வாகிகள் கைதட்டி வரவேற்ற நிலையில் அதனை வணங்கி ஏற்றுக் கொண்டுள்ளார் விஜய். இதன் மூலம் அதிமுக - பாஜக தலைவர்கள் இடைவிடாமல் விடுத்த கூட்டணிக்கான அழைப்பை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார் நடிகர் விஜய்.

விஜய் அதிரடி அறிவிப்பு

"கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜக உடன் கூடிக் குலைந்து கூட்டணி போக திமுகவோ அதிமுகவோ இல்லை நமது தமிழக வெற்றிக் கழகம்" என்று தவெக தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.

அதிமுக - பாஜகவுக்கு ஷாக்

முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பாஜக உடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என விஜய் அறிவித்துள்ளதால் இனி அவர் அதிமுக - பாஜக அணியில் இணைய வாய்ப்பில்லை. தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் தான் தவெக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக தேர்தல் களம் காணவிருக்கும் விஜய்யின் தவெக, தனி அணியாகக் களமிறங்கும் எனத் தெரிகிறது. அக்கட்சி, அதிமுக, பாஜகவுடன் சேராத பட்சத்தில் தனித்துப் போட்டியிடுமா? அல்லது தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு போகப் போக பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+