ரெடியானது அடுத்த லிஸ்ட்.. நாளை அறிவிக்கிறார் விஜய்! பனையூரில் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் கட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலை தவெக தலைவர் விஜய் நாளை (ஜனவரி 31) வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை பனையூரில் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார் விஜய்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026 சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கிறது. தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்பாக, கட்சியின் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகம்
234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் வகையில், கட்சியின் நிர்வாக வசதிக்காக, 120 கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல் 19 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் 19 மாவட்டச் செயலாளர்களுக்கும் நியமன ஆணையுடன், வெள்ளி நாணயம் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
38 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்
இரண்டாம் கட்டமாக 19 மாவட்ட பொறுப்பாளர்கள் கொண்ட பெயர் நேற்று பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட செயலாளர்களுக்கு நியமன ஆணையுடன், வெள்ளி நாணயம் வழங்கி வாழ்த்தினார் தவெக தலைவர் விஜய்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், உங்களை நம்பி மக்களுக்காக இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இனி நீங்கள்தான் இதன் வளர்ச்சியை பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தனை ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போதும் எனக்காக துணை நின்று என்னுடன் உழைத்தீர்கள் பயணித்தீர்கள். உங்களது நீண்ட கால கோரிக்கைப்படி நாம் தற்போது கட்சியை தொடங்கி சிறப்பாக பயணத்தை தொடர்ந்து வருகிறோம். அனைவரும் சேர்ந்து பயணிப்போம். நிச்சயம் 2026 ஆம் ஆண்டு வெற்றி பெறுவோம் என்றார்.
நாளை 3வது பட்டியல்
இந்நிலையில், தவெகவின் மாவட்ட செயலாளர்கள் 3வது பட்டியலை தவெக தலைவர் விஜய் நாளை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள் தேர்வுப் பணி முடிந்துள்ளதாகவும், நாளை அந்த நிர்வாகிகளை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து விஜய் வாழ்த்து தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆதவ் அர்ஜுனா
இது ஒருபுறம் இருக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவரே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 'அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தது, விசிக கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
விசிகவிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்ததது முதல் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என யூகங்கள் எழுந்தன. ஆதவ் அர்ஜுனா நேற்று விஜய்யை சந்தித்துப் பேசினார். விரைவில் அவர் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தில் ஆதவ் அர்ஜுனா இணைந்த பிறகு அவருக்கு முக்கிய பதவியை விஜய் கொடுக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
-
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
தப்பு செஞ்சா அடுத்த செகண்டே பதவி காலி.. பனையூர் தவெக ஆபீஸில் அமைச்சர் ஆனந்த் கொடுத்த அதிரடி ஷாக் -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர்












Click it and Unblock the Notifications