தவெக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு! அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை: மடப்புரம் கோயில் செக்யூரிட்டி அஜித்குமார் மரணம் தொடர்பாக, சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்காக காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க தற்போது உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
சென்னை சிவானந்தா சாலையில் நாளை மறுநாள்(ஜூலை 06) ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு தவெக வழக்கு தொடர்ந்திருந்தது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தவெக அறிவித்திருந்தது.

1. கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
2. அஜித் குமார் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
3. புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிட்டிருந்தது என்றும், ஆனால் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை என்றும், எனுவே நீதிமன்றம் இந்த விவகாரங்களில் உடனடியாக தலையிட்டு அனுமதி வழங்க வேண்டும் என்று தவெக தாக்கல் செய்திருந்த மனுவில் கறிப்பிடத்ப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் மூன்பு இன்று மதியம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தவெக முறையிட்டிருந்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, "இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம்? குற்றங்கள் செய்யாதீர்கள், போக்சோ குற்றங்களில் ஈடுபடாதீர்கள், மனைவியை கொடுமைப்படுத்தாதீர்கள் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். ஆங்கிலேயர் காலத்து சட்டங்களை திருத்தச் சொல்லுங்கள்." என்று தவெக தரப்புக்கு அறிவுறுத்தினார்.
இந்த மனு எண்ணிடப்பட்டு வந்தால், திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும், என்று நீதிபதி கூறியுள்ளார். திங்கட்கிழமை தான் தவெக போராட்டத்தை அறிவித்திருந்தது. ஆனால் அன்றைய தினம்தான் மனு விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர்












Click it and Unblock the Notifications