16 நிபந்தனைகள்.. முதல்முறையாக வீதிக்கு வரும் விஜய்.. சென்னையில் தவெக போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நாளை காலை நடக்க உள்ள போராட்டத்திற்கு காவல்துறை 16 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இந்த போராட்டத்தின் போது பட்டாசு வெடிக்க கூடாது, இரு சக்கர வாகன பேரணி நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் காவல்துறை தரப்பில் விதிக்கப்பட்டுள்ளன.

திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார் காவல்துறையின் கொடூரமான தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

TVK Protest in Chepauk Police Grant Permission with 16 Conditions

லாக் அப் மரணம்

அதேபோல் தவெக சார்பாக அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியும் செய்தார். இதனைத் தொடர்ந்து தவெக சார்பாக சென்னையில் லாக் அப் மரணங்களை கண்டித்து போராட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் தவெக அனுமதி கோரிய இடத்தில், வேறொரு இயக்கம் அன்றைய நாளில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது.

தவெக போராட்டம்

இதனால் வேறு இடத்தில் ஆர்ப்பாட்டம்ந் நடத்த காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தவெக உடனடியாக உயர்நீதிமன்றத்தில் முறையிட, 15 நாட்களுக்கு முன்பு காவல்துறையிடம் மனு அளித்தால்தான் அவர்கள் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் நாளை சென்னை சேப்பாக்கம் பகுதியில் போராட்டம் நடத்த தவெக சார்பாக காவல்துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டது.

16 நிபந்தனைகள்

இதனிடையே இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் காவல்துறை தாக்குதலால் மரணமடைந்த 18 குடும்பங்களை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். இந்த நிலையில் நாளை சேப்பாக்கத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் போராட்டத்திற்கு காவல்துறை தரப்பில் 16 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பில் 2 ஆயிரம் போலீஸ்

அதன்படி பட்டாசுகள் வெடிக்க கூடாது, இருசக்கர வாகன பேரணி நடத்த கூடாது, பைக் ரேஸில் ஈடுபட கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு வந்தபின் விஜய் பங்கேற்கும் முதல் போராட்டம் என்பதால், சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளன. தவெக சார்பாக சுமார் 6 ஆயிரம் பேர் வரை போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+