தவெகவின் தூய சக்தி முகமூடி.. முக்கிய விஷயத்தில் கிழித்து தொங்கவிட்ட நீதிமன்றம்.. சாடிய ஆர்.எஸ்.பாரதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊழலை ஒழிக்கும் உத்தம கட்சி போல வேடம் போட்ட தவெக அரசின் முகத்திரையை நீதிமன்றம் கிழித்து தொங்கவிட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அரசு வழக்கறிஞர் நியமனத்தில் கட்சி நிதி வசூல் செய்ய தவெக அரசு தொடங்கிவிட்டதாக கூறியுள்ள ஆர்.எஸ்.பாரதி. அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு ரூ.15 லட்சம் லட்சம் வாங்குவது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழலை ஒழிக்கும் உத்தம ஆட்சி போல வேடம் போட்ட தவெக அரசின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது நீதிமன்றம். ஆட்சிக்கு வந்த உடனே அரசு வழக்கறிஞர் நியமனத்தில் கட்சி நிதி வசூல் செய்ய தொடங்கவிட்டது தவெக அரசு என்று புகார்கள் எழுந்தன.

TVK

சமீபத்தில் கன்னியாகுமர் மாவட்டத்தில் அரசு வக்கீல் நியமனங்களுக்கு ரூ.15 லட்சம் வரை லஞ்ச பேரம் நடத்திய தவெக நிர்வாகி அணீஸ் என்பவரது அதிர்ச்சி ஆடியோ வெளியானது. அதுதொடர்பாக ஜெகன் ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தவெக அரசை நன்றாக வெளுத்துள்ளது. லஞ்சம் கொடுத்து வக்கீலாக வர வேண்டுமா?

இவர்கள் நாட்டை காப்பாற்றுவார்களா அல்லது சட்டத்தை பாதுகாப்பாளர்கா? என்று கேள்வி எழுப்பி உடனடியாக இந்த புகார் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூயசக்தி என கொடுத்து வந்த பில்டப்பை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத்துறையை தவெகவின் கிளை அமைப்பாக பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தூய சக்தியின் லட்சணத்தை தோலுரித்து காட்டி இருக்கிறது. இவர்கள் தூய சக்தி அல்ல.. தவெக ஒரு திருட்டு சக்தி என்பது வெளிப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாருக்கு பின்னடைவாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+