உங்களை போல் டெபாசிட் இழக்கவா வந்திருக்கோம்?நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!
சென்னை: தவெகவின் பயணம் பாஜகவை போல் டெபாசிட் இழப்பதற்காக அல்ல, எங்களது பயணம் வெற்றி என்ற இலக்கை எட்டுவதற்கான பயணம் என செங்கோட்டையன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செங்கோட்டையன் கூறியிருப்பதாவது: "பாஜகவின் விமர்சனங்களுக்கு பதில் பேச விரும்பவில்லை. எங்கள் லட்சியமே வேறு. வெற்றி என்ற இலக்கை எட்டுவதற்கு தான் நாங்கள் பயணம் மேற்கொள்கிறோமே தவிர டெபாசிட் இழப்பதற்கு அல்ல" என நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, மாநாடு போல் நடந்தது. சிறப்பான முறையில் நிகழ்ச்சி நடந்ததால் விஜயமங்கலம் விஜயாபுரி அம்மன் கோயிலிலும் சத்தியமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல் துறை முழு ஒத்துழைப்பு கொடுத்தது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு செங்கோல் வழங்கினார். அது போல் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமைய விஜய்க்கு நான் செங்கோல் வழங்கினேன் என தெரிவித்தார்.
அப்போது அவரிடம், "தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உங்களை திமுகவின் பி டீம்" என கூறியுள்ளாரே என நிருபர் கேட்டதற்கு, செங்கோட்டையன், "அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் இணைந்து கொள்வது சரியானதாக இருக்கும். நயினார் நாகேந்திரன் அதிமுகவின் பி டீமாக இருக்கிறார் என காட்டமாக பதிலளித்தார்.
தவெகவின் கொள்கை எதிரி பாஜகதான் என விஜய் கூறியிருந்தது குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், விஜய் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருவது குறித்து பேசினார். அவர் கூறுகையில் விஜய் ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட்டது இல்லை என விமர்சித்திருந்தார்.
இதற்கு செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்தார். அவர் கூறுகையில், "நயினார் நாகேந்திரன் எங்கிருந்து சென்றார், எத்தனை தேர்தல்களில் தோல்வியடைந்தார் என்பதெல்லாம் எனக்கும் தெரியும். இன்றைக்கு அவர் சவால் விடுகிறார், விஜய் ஒரு வார்டில் கூட ஜெயிக்க முடியாதுனு!
அவர் எங்கே நின்றாலும் டெபாசிட் இழக்க செய்வதே எங்களின் லட்சியம். யார் நமது காலை மிதிக்கிறார்களோ யார் நம்மை தவறாக பேசுகிறார்களோ அவர்களுக்கு இளைஞர்கள் பாடம் புகட்ட வேண்டும். நெல்லையை விட்டுவிட்டு நயினார் நாகேந்திரன் வேறு தொகுதியை தேடிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் எழுச்சி நாயகன் விஜய் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுவார். 234 தொகுதிகளிலும் அவர்தான் சட்டசபை உறுப்பினர் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications