வட்ட வட்ட பாறையில.. ஒத்த சீட்டும் தேறவில்ல! 0.29% ஓட்டு தான் IUMLக்கு 2 MLA! 4% இருந்தும் நாதக பாவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு? வாக்குகள் எவ்வளவு என்ற முழுமையான தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மிகக் குறைந்த வாக்கு சதவீதம் பெற்ற கட்சி என்றால் அது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 0.29% வாக்குகளை அந்த கட்சி பெற்றிருக்கும் நிலையில் இரண்டு எம்எல்ஏக்களை பெற்றிருக்கிறது. 0.66%, 0.60%,0.87 வாக்குகளை பெற்ற கம்யூனிஸ்டுகள் மற்றும் அமுகவுக்கு முறையை 2,2,1 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். ஆனால் மொத்தமாக 4.00% வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவியது. மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

Seeman

இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிக வாக்குப்பதிவு காரணமாக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கடைசி வரை நீடித்தது. மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டபோது, தமிழக அரசியலையே புரட்டிப்போடும் வகையில் முடிவுகள் வெளியாகின.

முதல் முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சேர்த்து 73 இடங்களை மட்டுமே கைப்பற்றின. அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் கடந்த பல தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சி செய்த திமுக - அதிமுக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு? வாக்குகள் எவ்வளவு என்ற முழுமையான தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் 34.92 சதவீத வாக்குகளை பெற்று மாநிலத்தின் மிகப்பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட கட்சியாக மாறியுள்ளது. அந்தக் கட்சிக்கு மொத்தமாக 1 கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள் கிடைத்துள்ளன.

திமுக 24.19 சதவீத வாக்குகளை பெற்று 1 கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுக 21.21 சதவீத வாக்குகளுடன் 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 வாக்குகள் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 19 லட்சத்து 72 ஆயிரத்து 537 வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் 3.37 சதவீத வாக்குகளையும், பாஜக 2.97 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் இருந்தும் பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற கட்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 1.09 சதவீத வாக்குகளும், தேமுதிக 1.20 சதவீத வாக்குகளும், அமமுக 0.87 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 0.87% வாக்குகளைப் பெற்று 4,25,345 ஓட்டுகளை பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.66%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 0.60%,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 0.29% வாக்குகளை பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்களுக்கு கூட 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல் நோட்டாவுக்கும் சுமார் 2 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் நான்கு சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. ஆனால் 0.29% வாக்குகளை பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது.

0.66% வாக்குகளை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட், 0.60% வாக்குகளை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தல 2 தொகுதிகளை பெற்றுள்ளன. டிடிவி தினகரனை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 0.87% சதவீத வாக்குகளை பெற்ற நிலையில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த பல தேர்தல்களாக 2 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் வரை கூட நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்ற நிலையில் இதுவரை மக்கள் பிரதிநிதிகளை அந்த கட்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+