சத்யபாமா முகமெல்லாம் டென்ஷன்.. “கியாரே செட்டிங்கா?” கப்சிப் மோடில் பாமக.. தவெகவுக்கு ரூட் கிளியரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக அனைத்து, சாதி கணக்கு, மத கணக்கு என எல்லா கணக்கையும் பார்க்கிறது. தாராபுரத்தில் கொங்கு வேளாளர்களை குறிவைத்து பிரபல ஆஞ்சநேயர் கோயிலுக்கும், குலதெய்வக் கோயிலுக்கும் போனது அதில் ஒரு பகுதிதான்.. ஆனால் கோயிலுக்கு போனதாலேயே ஓட்டு வந்துவிடுமா? மக்கள் கரண்ட், விவசாயம், வேலைவாய்ப்பு, உள்ளூர் பிரச்சனை, நிர்வாகம் என நிறைய விஷயங்களை மக்கள் அலசி பார்க்கிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான கோடீஸ்வரன்.

தமிழ் நிறம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன் "ஒரு கட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எப்பவுமே நடக்கக்கூடிய விஷயம்தான். இதில் ஒன்றும் பெரிய கடினமான விஷயம் கிடையாது. ஆனால் தவெகவுக்கு இந்த 2 இடைத்தேர்தலும் ஒரு பயத்தை தந்திருக்கிறது..

Sathyabama TVK PMK

தவெகவுக்கு ஓட்டுக்கள்

தவெகவுக்கு ஓட்டுக்கள் அதிகமாகவே வாங்கும்.. அதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் பொதுத்தேர்தலைவிட இப்போது ஒரு 5 சதவீதம் வரை ஓட்டு குறையலாம் என்றே தெரிகிறது. 8 சதவீதம் கூட குறைய வாய்ப்பு இருப்பதாக சில பூத்களில் பேசும்போது கூறினார்கள். .

வேட்பாளர்களில் சத்யபாமா, மரகதம் குமரவேல் இருவருமே டென்ஷனாக இருந்தனர்.. குறிப்பாக தாராபுரத்தில் சத்யபாமா கொஞ்சம் டென்ஷனாக இருப்பதாக களத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள் சொன்னார்கள்.

30 கோடி, 31 கோடி செலவு செய்ததாக பேசப்படும் வீடியோக்கள் வேறு வந்திருக்கு. அது உண்மையா, பொய்யா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். தேர்தல் நேரத்தில் இப்படியொரு வீடியோ வருவது வேட்பாளருக்கு தேவையில்லாத தர்மசங்கடம்தான். இந்த தொகுதியில் ஆரம்பத்திலிருந்தே சத்யபாமாவுக்கு எதிர்ப்புதான்..

மரகதம் குமரவேல் கொஞ்சம் உற்சாகம்

சத்யபாமாவுடன் ஒப்பிடும்போது மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் கொஞ்சம் உற்சாகமாக இருக்கிறார். இதற்கு காரணம், மரகதம் குமரவேல் கணவர் உட்பட கட்சிக்காரர்கள் பலரும் இறங்கி தொகுதியில் வேலை பார்த்தனர்..

அதேபோல, எப்போதுமே மதுராந்தகம் என்றால், பாமக ஒருசில பிரச்சனைகளை செய்யும்.. ஆனால், இப்போது எந்தவிதமான சத்தமும் இல்லாமல் பாமக ஒதுங்கி விட்டது. இது தவெகவுக்கு வசதியாகி விட்டது.. பாமகவும் பெரிய அளவில் குறுக்கிடவில்லை. இதை "அன்பே சிவம்" மாதிரி பார்க்கலாம்.. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற நிலைப்பாடு... யார் பக்கம் என்று தெளிவாக சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள்.

பாமக, விசிக அமைதி

நாளைக்கு மக்கள் பிரச்சனை வந்தால் உறுதியான நிலைப்பாடு எடுப்பார்களா என்பதுதான் கேள்வி. அதே நேரத்தில் விசிகவும் இந்த தேர்தலில் ரொம்ப அமைதியாக உள்ளனர். திருமாவளவன் டெல்லி போயிட்டார்...

வழக்கமாக வன்னியரசு ஏதாவது பேசி கொண்டேயிருப்பார்.. ஆனால், 2 நாட்களாக அமைதியாக உள்ளார்.. இதுபோன்ற இந்த அரசியல் நகர்வுகளைப் பார்க்கும்போது, "ரஜினி செட்டிங்கா?" என்று ஒரு படத்தில் சொல்வதுதான் ஞாபகம் வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரைக்கும் பெரிய அடிதடி, உருட்டுக்கட்டை என்று எதுவும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்தது..

திமுகவுக்கு விழும் ஓட்டும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.. அதைவிட, அதிமுகவிடம் இருந்து கைப்பற்றிய தொகுதி என்பதால், அதிமுக எவ்வளவு ஓட்டு தக்க வைக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் "புதுசா வந்திருக்காங்க, ஒரு வாய்ப்பு கொடுப்போம்" என்று தாவெகவுக்கு ஓட்டு போட நினைக்கிறவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் விஜய்யின் வசீகரம் இன்னமும் இருக்கிறது.ஆனால் வசீகரம் மட்டுமே இங்கு போதாது.

விஜய் ஆட்சி நிர்வாகம்

அரசியல் வேறு, நிர்வாகம் வேறு... கலைஞர், ஜெயலலிதாவுக்கு அரசியலும் நிர்வாகமும் வந்தது. காமராஜருக்கு நிர்வாகம் மிக நன்றாக வந்தது. விஜயகாந்துக்கு அரசியல் தெரிந்தது; ஆனால் ஆட்சி நடத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்போது தவெக அனைத்து, சாதி கணக்கு, மத கணக்கு என எல்லா கணக்கையும் பார்க்கிறது. தாராபுரத்தில் கொங்கு வேளாளர்களை குறிவைத்து பிரபல ஆஞ்சநேயர் கோயிலுக்கும், குலதெய்வக் கோயிலுக்கும் போனது அதில் ஒரு பகுதிதான்.. ஆனால் கோயிலுக்கு போனதாலேயே ஓட்டு வந்துவிடுமா? மக்கள் கரண்ட், விவசாயம், வேலைவாய்ப்பு, உள்ளூர் பிரச்சனை, நிர்வாகம் என நிறைய விஷயங்களை மக்கள் அலசி பார்க்கிறார்கள்.

மொத்தத்தில் இது தவெகவுக்கு ஒரு தேர்தல் மட்டுமே இல்லை.. பூத் அமைப்பு, கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு, உள்ளூர் அரசியல், விஜய்யின் வசீகரம், திமுகவின் ஓட்டு என நிறைய கணக்குகளை கற்றுக்கொடுக்கிற தேர்தல். உண்மையான கணக்கு ரிசல்ட் அன்னைக்குத்தான் தெரியும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+