100க்கு 10 ரூபாய்.. தேர்தலில் 19.8 கோடி செலவு செய்த தவெக! திமுக - அதிமுகவின் செலவு எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 19 கோடியே 80 லட்சம் ரூபாயை தேர்தலுக்காக செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் கணக்கு விபரங்களை தாக்கல் செய்துள்ளது. திமுக சுமார் 190 கோடியும், அதிமுக 112 கோடியையும் செலவு செய்திருக்கும் நிலையில், திமுகவுடன் ஒப்பிடும்போது நூற்றுக்கு பத்து ரூபாய் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் செலவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2026 தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 234 தொகுதிகளில் 233 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் நேரடியாக களமிறங்கினர். சேலத்தில் மட்டும் சுயேட்சைக்கு ஆதரவு தெரிவித்தது தமிழக வெற்றி கழகம்.

TVK DMK AIADMK

தேர்தல் முடிவுகள் வெளியான போது 108 தொகுதிகளில் வென்று தனிப் பெருங்கட்சியான தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து இருக்கிறது. அந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ஐயூஎம்எல் உள்ளிட்டவை அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளன,

2026 சட்டசபை தேர்தல்

இந்த நிலையில் 2026 தமிழக சட்டசபை தேர்தல் காலத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்னென்ன செலவுகளை மேற்கொண்டது என்பது தொடர்பான அதிகாரபூர்வ கணக்கு வழக்குகளை, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிறார் அந்த கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமணன். அதில் மொத்த தேர்தல் செலவாக 19.8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தவெக தேர்தல் செலவு

முதல்வர் வேட்பாளராக இருந்த விஜயின் விமான பயணத்திற்காக மட்டும் 3 கோடியே50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை நான்கு முறை விமான பயணத்திற்காக பணம் செலுத்தப்பட்டிருக்கிறது TAI Jets Pvt Ltd, Chipsan Aviation Pvt Ltd மற்றும் Fly High Global Aircraft Management Services Pvt Ltd ஆகிய நிறுவனங்களுக்கு இந்த தொகை செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தேர்தல் செலவு

விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளுக்காக மட்டும் சுமார் ரூ.40 லட்சம் செலவு செய்யப்பட்டதாகவும் கணக்கு தாக்கலில் கூறப்பட்டுள்ளது. இந்த செலவு கணக்கில் பெரும்பாலான தொகை தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. அதாவது 19 கோடியே 40 லட்சம் ரூபாய் பிரச்சாரத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஊடக விளம்பரங்களுக்காக 6 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், வானொலி விளம்பரங்களுக்கு இந்த பணம் செலவிடப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவின் Voice of Common Strategic Consulting Pvt Ltd நிறுவனத்துக்கு ஒரு கோடியே 79 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டங்கள், சாலை பேரணிகளுக்கு 2 கோடியே 10 லட்சம் ரூபாயும், பிரசாரப் பொருட்களுக்கு 40 லட்சத்து 50 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. இந்த கணக்குகள் புக்ஸ் என்ற பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவெக பிரச்சார செலவு

அதே நேரத்தில் தேர்தல் செலவு அறிக்கையில் வேட்பாளர்களுக்கான செலவு என எந்த தொகையும் குறிப்பிடப்படவில்லை. இதனால் போட்டியிட்ட வேட்பாளர்களே அந்த பிரச்சார செலவுகளை ஏற்றுக் கொண்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஆன்லைன் மற்றும் மெய்நிகர் பிரச்சாரத்திற்கான செலவு கணக்குகள் காட்டப்படவில்லை.

திமுக - அதிமுக

2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 197 கோடியே 80 லட்சம் ரூபாயும், அதிமுக 112 கோடியே 40 லட்சம் ரூபாயையும் தேர்தல் செலவு செய்துள்ளது. அந்த கணக்கின்படி பார்க்கும்போது தமிழக வெற்றி கழகம் தாக்கல் செய்துள்ள தேர்தல் வரவு செலவு கணக்கின் அடிப்படையில், திமுகவின் செலவில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே தவெக செலவு செய்திருக்கிறது. மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தமிழக வெற்றிக் கழகத்திடம் 3 கோடி ரூபாய் கையிருப்பு இருந்ததாகவும். தேர்தல் காலத்தில் 7 கோடி வருவாய் கிடைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+