“மக்களின் முதல்வர் என எப்படி நா கூசாமல் சொல்கிறீர்கள்?” முதலமைச்சருக்கு விஜய் சரமாரி கேள்வி
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இக்கூட்டத்தில் உரையாற்றிய விஜய், வீட்டிற்கு ஒருவரை தவெகவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மட்டுமல்லாது பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தமிழக அரசு மீது சரமாரியான விமர்சனங்களை அடுக்கியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே இருக்கும் நிலையில், தேர்தலுக்காக கட்சியை முழு வேகத்தில் தயார் செய்யும் பொறுப்பை தவெக நிர்வாகிகள் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். முதற்கட்டமாக விஜய் டெல்டா மாவட்டங்களிலிருந்து சுற்றுப்பணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான பயண திட்டமிடல், சுற்றுப்பயணத்திற்கு முன்னர் கட்சியின் மாநாட்டை நடத்துவது உள்ளிட்டவை குறித்து இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவாதங்களுக்கு பின்னர் பேசிய விஜய் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்புகளை பதிவிட்டிருந்தார். மேலும் பேசுகையில், "பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும்னு உங்க கவர்மெண்ட் சார்பாக விளக்க அறிக்கை ஒன்று வந்துச்சு. அந்த ஸ்டேட்மெண்ட்ல 1,500 குடும்பங்கள் மட்டுமே பரந்தூரில் வசிப்பதால் விமான நிலையம் வந்தால் பெரிய பாதிப்பு இருக்காது என்று சொல்லி இருந்தீங்க.
மக்கள் பாதிக்காத வண்ணம்னா என்னங்க சார்? ஒன்னு அந்த இடத்துல ஏர்போர்ட் வருதுன்னு சொல்லணும். இல்ல, அந்த இடத்துல ஏர்போர்ட் வராதுன்னு சொல்லணும். ரெண்டுமே அந்த அறிக்கையில் இல்லை வெறும் 1,500 குடும்பங்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு சாதாரணமா போச்சா சிஎம் சார்?
1500 குடும்பங்கள் எனில், 15,000 மக்கள். அந்த மக்களும் நம்ம மக்கள்தானே! ஏன் அந்த அக்கறையோ அந்த மனிதாபிமானமும் உங்ககிட்ட இல்ல? எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டும்தான் மக்கள் மேல உங்களுக்கு அக்கறை இருக்குமா?
நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை, மிகப்பெரிய நீர் நிலைகளை, ஆயிரக்கணக்கான வீடுகளை, அவங்களோட வாழ்வாதாரத்தை அழிச்சிட்டு அந்த இடத்துலதான் ஏர்போர்ட் கட்டி ஆகணும்னு என்ன சார் அவசியம் இருக்கு? அப்புறம் எப்படி சார் நீங்க உங்களை மக்களின் முதல்வர்ன்னு நா கூசாமல் சொல்றீங்க?
இதுல உங்களுக்கும், பரந்தூர் ஏர்போர்ட் கட்டுகிற பிரச்சனைக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி வேற காட்டுகிறீர்கள். ஆனால் ஏர்போர்ட்டுக்காக பரந்துரை பரிந்துரை செஞ்சதே உங்க கவர்மெண்ட்தான்னு ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சில மாதங்களுக்கு முன்னாடி சென்னை வந்திருந்த அப்போ சொன்னார். அதுக்கும் உங்க கிட்ட இருந்து எந்த பதிலும் இல்லை.
மாண்புமிகு @CMOTamilnadu திரு. @mkstalin அவர்களுக்கு... pic.twitter.com/C7YwjTxffg
— TVK Vijay (@TVKVijayHQ) July 4, 2025
இந்த சூழ்நிலையில் பரந்தூர் விமான நிலைய பணிகளுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த, 25-6-2025 அன்னைக்கு உங்க கவர்மெண்ட் தான் அரசாணை பிறப்பித்து இருக்கு. விமான நிலையம் அமைக்கிறது ஏற்க மாட்டோம்னு வருஷகணக்காக போராடிய மக்களோட நிலங்களையும் சேர்த்தே கையகப்படுத்த அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கு" என்று சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications