Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க காசு.. "தலை"களின் கட்சி தாவல்.. சலசலப்பு நடுவில் இது வேறயா? விஜய் பற்றி பேச திமுகவில் தடை? ஓஹோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக, அதிமுகவில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் விஜய்யின் தவெகவில் சேர உள்ளதாக தகவல்கள் கசிந்து கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தகவல் திமுக தரப்பினருக்குள் மிகுந்த கவனத்தையும் பெற்று வருகிறது.
தமிழகம் மட்டுமல்லாது கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த வருடம் ஏப்ரல் - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.. அந்தவகையில், தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் எல்லாம் இப்போதே தேர்தலை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் கடந்த முறை அதிமுக தொடர் வெற்றியை (2011, 2016-ம் ஆண்டுகளில்) பெற்றதுபோல், இந்த முறை நாம் பெற்றுவிட வேண்டும் என்று திமுக உறுதியாக உள்ளது..

Gold Coin Vijay DMK

அதிமுக தங்க காசு

அதேபோல, அதிமுகவும் இந்த முறை விடுவதாக இல்லை.. இதற்கான கூட்டங்களை இப்போதே நடத்த தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. உட்கட்சி பிரச்சனைகளையும் தாண்டி, எடப்பாடி பழனிசாமி இதற்கான ஆலோசனைகளிலும் இறங்கி உள்ளார்.. அதிலும் திருப்பூர் மாவட்டத்தில், அதிமுக கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 3-நபர்களுக்கு தங்க நாணயமும், 300 பேருக்கு வீட்டு உபயோகப் பொருட்களும் வழங்கப்படும் என துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது, தொண்டர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தவெக தலைவர் விஜய்யின் அரசியல்

ஆனால், இந்த முறை, விஜய்யின் வருகை லேசான கலக்கத்தை அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.. எனவே, திமுக, அதிமுக, பாஜக, விஜய், சீமான் என 5 முனைப் போட்டி நிலவ வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், வரும் 14-ந் தேதி தமிழக சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பு கடைசியாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான் என்பதால், ஏராளமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அமைச்சரவை கூட்டம்

இது சம்பந்தமாக கடந்த 25-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சர்களுடன் விரிவாகவே ஆலோசனை நடத்தியிருந்தனர்.

அப்போது, பட்ஜெட்டையும் தாண்டி அரசியல் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின்,"அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வெற்றியை மட்டுமல்லாது, மாவட்டத்தில் உள்ள பிற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றியையும் உறுதி செய்ய வேண்டும்.

பொறுப்பு அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். தவெக தலைவர் விஜய்யை பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்.. அப்படி ஏதாவது பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், கட்சி தலைமையில் இருந்து கருத்து தெரிவிக்கப்படும் என்று சொன்னாராம்.

இதுதான் காரணமா

"விஜய் பற்றிய விமர்சனங்கள் கூடாது" என்ற இந்த வாய்மொழி உத்தரவானது அமைச்சர்களையும், திமுக தொண்டர்களையும் யோசிக்க வைத்து வருகிறதாம்.. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் அளித்ததால்தான் இன்றைக்கு அவர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுவிட்டார். அதுபோல நிலையை விஜய்க்கும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால் இப்படியொரு முடிவை திமுக எடுத்திருக்கலாம் என்று சலசலக்கப்படுகிறது.

மாற்று கட்சியினர் இணைகிறார்களா?

ஏற்கனவே, திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளில் இருந்து சிலர் விஜய்யின் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் இணைப்பு விழா நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதாவது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் "தமிழக வெற்றி கழகம்" கட்சியில் சேர முடிவு செய்திருப்பதாகவும், அதேபோல் பாஜகவில் உள்ள இரண்டு முக்கிய பிரபலங்களும் விஜய் கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தவெகவில் மூத்த தலைவர்கள் இணைய வாய்ப்பு?

அதேபோல, திமுகவில் உள்ள சில முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் சேர உள்ளதாகவும், இந்த கட்சியில் இணைய உள்ளவர்களின் பெயர் மற்றும் இணைவதற்கான தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி அதற்கு மேல் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் விஜய்யின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும் என்றாலும், அதனை திராவிட கட்சிகள் முறியடித்து காட்டும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+